இளவரசர் வில்லியமுக்கு கிடைத்த எதிர்பாராத முத்தம்: ஒரு சுவாரஸ்ய தகவல்
பிரித்தானிய மன்னர் சார்லஸ் மக்களை சந்திக்கும்போது, எதிர்பாராமல் திடீரென அவரை மக்களில் சிலர் முத்தமிட்டதுண்டு. அவரும் மறுப்பேதும் சொல்லாமல் அதை அன்புடன் ஏற்றுக்கொள்வார்.
இப்போது, மன்னருடைய மகனும், வருங்கால மன்னருமான இளவரசர் வில்லியமுக்கும் அதேபோல முத்தங்கள் கிடைக்கத் துவங்கியுள்ளது!
வீடற்றவர்களுக்கு உதவி
இளவரசர் வில்லியம், வீடில்லாமல் சாலையோரமாக வாழும் மக்களுக்கு உதவுவதற்காக, வீடில்லா நிலையை ஒழிப்பதற்கான ஐந்தாண்டுத் திட்டம் ஒன்றை ஜூன் மாதம் துவக்கினார்.
அதைப் பின்பற்றி பல பிரித்தானிய அமைப்புகள் வீடற்றவர்களுக்கு வேலை கொடுத்தல் முதலான நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளன. இங்கிலாந்தின் Bournemouthஇல் அமைந்துள்ள Pret A Manger என்னும் சிற்றுண்டி உணவகம் வீடற்றவர்களுக்கு உதவிவருவதால், அந்த உணவகத்திற்கு சென்று அங்கு நடைபெறும் விடயங்களை பார்வையிட்டார் வில்லியம்.
இன்ப அதிர்ச்சி
அப்போது, அங்கு Paul Gascoigne எனும் நபர் நிற்பதைக் கவனித்த வில்லியம், நீங்களா, என்று கேட்டு அவரிடம் கைகுலுக்க, அவர் இளவரசர் கன்னத்தில் முத்தம் ஒன்றைப் பதித்தார்.
இந்த Paul Gascoigne முன்னாள் கால்பந்து வீரர் ஆவார். மதுவுக்கு அடிமையாகி கஷ்டப்பட்டு, பிறகு அதிலிருந்து விடுபட்ட அவர், தான் இப்போது நன்கு தேறி வருவதாக வில்லியமிடம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, AFC Bournemouth என்னும் கால்பந்து குழுவினரையும் சந்தித்தார் வில்லியம். அந்த குழுவினரும் வீடற்றவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |