எல்லாம் மன்னிக்கப்பட்டது! முடிசூட்டு விழாவில் புகார் கூறிய நடிகைக்கு..விருது அளித்த இளவரசர்
அரச குடும்பம் மிகவும் வெண்மையாக இருந்ததாக மன்னரின் முடிசூட்டு விழா குறித்து புகார் கூறிய நடிகை, இளவரசர் வில்லியமிடம் இருந்து MBE விருது பெற்றார்.
சர்ச்சை நடிகை
மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவின்போது பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியை 'மிகவும் வெண்மை' (terribly white) என்று நடிகை அட்ஜோவா ஆண்டோ கூறியது சர்ச்சையானது. 
அதாவது, பெரும்பாலும் வெள்ளையர்கள் அதிகமாக வசிக்கும் சூழலில், நிற மக்கள் இல்லாததை சுட்டிக்காட்ட விமர்சன ரீதியாக இந்த வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார்.
இந்த நிலையில் அட்ஜோவா ஆண்டோ (Adjoa Andoh) நாடகத்திற்கான தனது சேவைகளுக்காக MBE (Member of the Order of the British Empire) விருதினை பெற்றார்.
அவருக்கு இளவரசர் வில்லியம் அந்த விருதினை இன்முகத்துடன் வழங்கினார். முன்னதாக, இருவரும் நன்றாக சிரித்து பேசினர். 
கடினமான உணர்வுகளையும் அசைத்துவிட்டதாக
இதன்மூலம் புகார் கூறி சர்ச்சையை தூண்டிய அட்ஜோவா ஆண்டோவின் செயல் மன்னிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
அரியணைக்கு வாரிசான இளவரசரிடம் இருந்து அவர் தனது MBE விருதினை ஏற்றுக்கொண்டதால், எந்தவொரு கடினமான உணர்வுகளையும் அசைத்துவிட்டதாக தெரிகிறது.
முடிசூட்டு விழாவை அற்புதம் என்று விவரித்த அட்ஜோவா, யாரையும் வருத்தப்படுத்த விரும்பவில்லை என்றும் கூறினார். 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |