இளவரசர் வில்லியம் அறையில் ஒட்டி வைத்திருந்த அழகிகளின் படங்கள்: அம்மா டயானா கொடுத்த அதிர்ச்சி
இளவரசர் வில்லியம், இளம் வயதில் தன் அறையில் சில அழகிய மொடல்களின் படங்களை ஒட்டிவைத்திருந்தாராம். அதைக் கண்டு, தனது தாயாகிய இளவரசி டயானா தனக்குக் கொடுத்த அதிர்ச்சியை இன்றும் மறக்கமுடியவில்லை என்கிறார் வில்லியம்.
இளவரசர் வில்லியம் அறையில் ஒட்டி வைத்திருந்த அழகிகளின் படங்கள்

இளம் வயதில் இளவரசர் வில்லியம் தனது அறையில், பிரபல மொடல் அழகிகளான சிண்டி கிராபோர்டு, நவோமி கேம்ப்பல் மற்றும் கிறிஸ்டி டர்லிங்டன் ஆகியோரின் படங்களை ஒட்டிவைத்திருந்தாராம்.
அதை வில்லியமுடைய தாயாகிய இளவரசி டயானா கவனித்திருகிறார். ஆகவே, அவர் தன் மகனுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.

வில்லியமுக்கு தாய் கொடுத்த இன்ப அதிர்ச்சி
அப்போது இளவரசர் வில்லியமுக்கு 12 அல்லது 13 வயது இருக்குமாம். பள்ளி முடிந்து வீடு திரும்பிய வில்லியம் வீட்டின் மாடிப்படிகள் ஏறிக்கொண்டிருக்க, திரும்பிப்பார்த்தால், அங்கே பிரபல மொடலான சிண்டி நிற்கிறாராம். அதிர்ச்சியில் நான் படியிலிருந்து விழப்பார்த்தேன் என்கிறார் வில்லியம்.

ஆம், பிள்ளைகளுக்குத் தெரியாமல் சிண்டியை தொலைபேசியில் அழைத்த டயானா, என் வீட்டுக்கு தேநீர் அருந்த வரமுடியுமா என திடீரென கேட்க, அவரும் இன்ப அதிர்ச்சியில் திளைத்துள்ளார்.

தன் அறையில் படமாக ஒட்டி வைத்திருந்த, தனக்குப் பிடித்த மொடலான சிண்டியை நேரில் பார்த்து, வெட்கத்தில் முகமெல்லாம் சிவந்துபோய் நின்றதை நினைவுகூறும் வில்லியம், இப்போது நினைத்தாலும் அம்மாவின் குறும்புகள் மலரும் நினைவுகளாக கண் முன்னே நிற்கிறது என்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |