குடியரசு ஆகிறதா கரீபியன் நாடுகள்? பிரித்தானிய இளவரசர் பரபரப்பு பேச்சு
கரீபியன் நாடுகள் தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கும் எந்தவொரு சுதந்திர முடிவுக்கும் ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக பிரித்தானிய இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் இருவரும் ராஜமுறைப் பயணமாக கரீபிய தீவு நாடுகளான பெலிஸ், பஹாமாஸ் மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், பஹாமாஸ் நாட்டின் தலைநகர் நாசாவ்-வில் உரையாற்றிய இளவரசர் வில்லியம், ''அடுத்த ஆண்டு நீங்கள் உங்களது 50வது சுகந்திர தினத்தை கொண்டாட போகிறீர்கள், அது உங்கள் நாட்டின் பொன்விழா ஆண்டு, அத்துடன் ஜமைக்கா இந்த ஆண்டு 60வது சுகந்திர தினத்தை கொண்டாடவுள்ளது மற்றும் அடுத்த ஆண்டு பெலிஸ் 40வது சுகந்திர தினத்தை கொண்டாடவுள்ளது'' என தெரிவித்தார்.
picture: March 25, 2022. Paul Edwards
மேலும் இந்த பொன்னான தருணத்தில் இதை நான் கூறவேண்டும் என தெரிவித்து, பெலிஸ், பஹாமாஸ் மற்றும் ஜமைக்கா போன்ற கரீபியன் நாடுகள் தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கும் எந்தவொரு சுகந்திர முடிவுக்கும் மதிப்பும், ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இவற்றின் மூலம் புதிய உறவுகள் உருவாகும் மற்றும் நட்பும் நிலைத்து இருக்கும் என தெரிவித்த அவர் இந்த சுற்றுப்பயணத்தில் போது பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் நிலவிய அடிமைத்தனம் மற்றும் போராட்டங்களுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் அவற்றுக்கான இழப்பீடு ஆகியவற்றிக்காக நடத்தப்பட்ட போராட்டத்திற்கும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
picture:March 25, 2022. REUTERS/Toby
இளவரசர் வில்லியமின் இந்த அறிவிப்புக்கு முன்னதாக கடந்த வியாழன்கிழமை நடந்த கூட்டத்தில் ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் நேரடியாகவே முழுமையான சுகந்திரம் குறித்த கோரிக்கையை இளவரசர் வில்லியமிடம் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.