இளவரசர் ஹரியை அடுத்து... கமிலாவுக்கு எதிராக திரும்பிய இளவரசர் வில்லியம்: எதிர்பார்க்காத திருப்பம்
டயானாவின் பிள்ளைகள் இருவரும் தங்கள் தந்தையின் இந்த முடிவுக்கு ஒப்புக்கொள்ளவில்லை
தமது பிள்ளைகளுக்கு வளர்ப்பு பாட்டியாராக ஒருபோதும் கமிலாவை ஏற்க முடியாது என வில்லியம்
ராணியார் மறைவுக்கு பின்னர் வேல்ஸ் இளவரசராக பொறுப்பேற்றுள்ள வில்லியம் ராணியாராக முடிசூட்டவிருக்கும் கமிலாவிடம் முன்னர் விவாதித்த விடயம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இளவரசி டயானா விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், மன்னர் சார்லஸ் தமது முன்னாள் காதலியான கமிலாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த முடிவில் ராணியாருக்கு மறுப்பேதும் இல்லை என்றாலும், டயானாவின் பிள்ளைகள் இருவரும் தங்கள் தந்தையின் இந்த முடிவுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றே தற்போது தகவல் கசிந்துள்ளது.
@getty
இளவரசர் ஹரி கமிலா தொடர்பில் மோசமாக பேசியதாக வெளியான தகவல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இளவரசர் வில்லியம் கமிலாவிடம் தெரிவித்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமது பிள்ளைகளுக்கு வளர்ப்பு பாட்டியாராக ஒருபோதும் கமிலாவை ஏற்க முடியாது என வில்லியம் அவரிடமே தெளிவுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ராஜகுடும்பத்தில் தமக்கான ஒரு தகுதிவாந்த நிலையை கமிலா எட்டியிருந்தாலும், முக்கிய நபர்கள் சிலருடன் உறவை பேணுவதில் அவரால் வெற்றிகொள்ள முடியாமலே உள்ளது.
@getty
அதில் முதன்மையானவர்கள் டயானா இளவரசியின் பிள்ளைகளான வில்லியம் மற்றும் ஹரி இருவருமே. கமிலா தமது தந்தைக்கு மனைவி, ஆனால் அதனால் தமது பிள்ளைகளுக்கு அவர் வளர்ப்பு பாட்டியார் அல்ல எனவும், தமது பிள்ளைகளுக்கு இரு தாத்தாக்கள், ஆனால் ஒரே ஒரு பாட்டியார் மட்டுமே எனவும் வில்லியம் உறுதிபட தெரிவித்ததாக கூறப்படுகிறது.
@PA