மன்னர் சார்லஸை எரிச்சலூட்டிய இளவரசி கேட்! முகம் சுளிக்கவைத்த அந்த புகைப்படம்
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியினரால் மன்னர் சார்லஸ் ஏமாற்றமடைந்ததாக கூறப்படுகிறது.
இளவரசி கேட்டின் முகம் சுளிக்கவைக்கும் புகைப்படங்கள் வெளியானதால் கோபம்.
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஒருமுறை ஜோடியாக வட அமெரிக்காவிற்கு தங்கள் முதல் அதிகாரப்பூர்வ பயணத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸை மகிழ்விக்கத் தவறிவிட்டனர்.
அப்போது வெல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ், கேட் மற்றும் வில்லியம் ஆகியோரின் உத்தியோகபூர்வ அரச பயணத்தை விடுமுறையாக கருதியதற்காக கோபமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களை ரசனையற்றவர்கள் (tasteless) என்று சார்லஸ் முத்திரை குத்தியதாக, அரச நிபுணரும் வாழ்க்கை வரலாற்றாளருமான சாலி பெடல் ஸ்மித் (Sally Bedell Smith) தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
2011-ல் நடந்த இந்த சம்பவத்தில் மன்னர் சார்லஸ் வில்லியம்-கேட் தம்பதியினருடன் மகிழ்ச்சியடையவில்லை என்றும், அந்த சுற்றுப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட அவர்களின் முறைசாரா புகைப்படங்களால் கொஞ்சம் எரிச்சலடைந்ததாகவும் ஸ்மித் கூறினார்.
இந்த பயணத்தின்போது இளவரசி கேட்டின் உடை காற்றை பறந்தால் சங்கடமான சூழல் ஏற்பட்டதாகவும், அப்போது எடுக்கப்பட்ட சில முகம் சுளிக்கவைக்கும் புகைப்படங்கள் வெளியானது.
மேலும், கேட் தனது உடையால் பல ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக மாறினார். இவை அனைத்தும் மன்னர் சார்லஸை மிகவும் எரிச்சலடைய செய்ததாக கூறப்படுகிறது.
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஏப்ரல் 2011-ல் திருமணம் செய்து கொண்டனர், அவர்களுக்கு ஜார்ஜ், சார்லோட் மற்றும் லூயிஸ் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.