எதுவுமே செய்யாமல் பெருந்தொகை பெற இருக்கும் இளவரசர் ஹரி: எரிச்சலில் வில்லியமும் கேட்டும்
இளவரசர் ஹரிக்கு விரைவில் கிடைக்க இருக்கும் பெரும் தொகை ஒன்று கிடைக்க இருக்கும் நிலையில், அந்த விடயம் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்டை எரிச்சலடைய வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரிக்கு கிடைக்கவிருக்கும் பெரும் தொகை
மறைந்த எலிசபெத் மகாராணியாரின் தாயான முதலாம் எலிசபெத் ராணியார், தனது குடும்பத்துக்காக ஒரு அறக்கட்டளையை நிறுவி, தன் குடும்ப உறுப்பினர்களுக்காக சுமார் 70 மில்லியன் பவுண்டுகளை வைத்துச் சென்றுள்ளார்.
இளவரசர் ஹரிக்கு 40 வயதாகும்போது, அந்த பணத்திலிருந்து அவருக்கு 7 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும்.
அடுத்த மாதம் 15ஆம் திகதி, ஹரி 40 வயதை எட்டுவார். அப்போது அவருக்கு இந்த தொகை வழங்கப்படும்.
எரிச்சலில் இளவரசர் வில்லியமும் கேட்டும்
ஆனால், ராஜ குடும்பப் பொறுப்புகளை கைவிட்டுச் சென்ற ஹரி, இவ்வளவு பெரிய தொகையைப் பெற தகுதியற்றவர் என இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான கேட்டும் கருதுகிறார்கள்.
இவ்வளவு பெரிய தொகையைப் பெறுவதற்கு ஹரி எதுவுமே செய்யவில்லை என்பதால், ஹரிக்கு 7 மில்லியன் பவுண்டுகள் கிடைக்க இருக்கும் செய்தி வில்லியம் கேட் தம்பதியரை அப்செட் ஆக்கியுள்ளதாக தம்பதியருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆக, இந்த விடயமும் சகோதரர்களுக்கிடையிலான பகையை அதிகரிக்கவே செய்துள்ளது என்பதால், இப்போதைக்கு பிரிந்த குடும்பம் இணைவது கடினம் என்றே தோன்றுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |