இளவரசர் ஹரியின் மனைவிக்கு பிறந்தநாள்: முதல் ஆளாக அவரை வாழ்த்தியிருப்பது யார் பாருங்கள்...
பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கல் இன்று தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
முதல் ஆளாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது யார் தெரியுமா? பிரித்தானிய மகாராணியார்தான்...
மகாராணியார் சார்பில், பக்கிங்காம் அரண்மனை அலுவலர்கள், 'Wishing the Duchess of Sussex a very happy birthday today!' என்ற வாசகம் அடங்கிய வாழ்த்து ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
அடுத்த சில நிமிடங்களில், இளவரசர் வில்லியமும் கேட்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்கள். மேகன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அதில், 'Wishing a happy 40th birthday to the Duchess of Sussex!' என்ற வாசகத்தை இணைத்து, மேகனுக்கு தங்கள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள் இளவரசர்கள் வில்லியமும் கேட்டும்.
ஒரு காலத்தில் இணைபிரியாத சகோதரர்கள் என கருதப்பட்ட இளவரசர்கள் வில்லியம் ஹரிக்கு இடையிலான உறவில், மேகனும் ஹரியும் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறி அமெரிக்கா செல்ல முடிவெடுத்ததைத் தொடர்ந்து பிளவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த புகைப்படம் இளவரசர்கள் வில்லியமும் கேட்டும் ஹரி மேகனுடனான உறவை சரி செய்துகொள்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு சிறிய அடையாளம் என ராஜ குடும்ப ரசிகர்கள் கருதுகிறார்கள்.
அவர்களைத் தொடர்ந்து இளவரசர் சார்லஸ் அவரது மனைவி கமீலா ஆகியோர் மேகனின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியிருக்கிறார்கள்.
ஆக, என்னதான் குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும், பிள்ளைகளுக்கு ஒரு நல்ல விடயம் என்றால், அதை பாராட்ட ராஜ குடும்ப உறுப்பினர்கள் யாருமே ஒரு கணம் கூட யோசித்ததாக தெரியவில்லை.