வாடகை வீட்டில் குடியிருந்த இளவரசர் வில்லியம் கேட் தம்பதி: வாடகை எவ்வளவு தெரியுமா?
இளவரசர் வில்லியம், தன் மனைவி கேட் மற்றும் பிள்ளைகளுடன் விண்ட்சர் மாளிகை எஸ்டேட்டிலுள்ள எட்டு படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டுக்கு குடிபோகப் போவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
ஆனால், இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர், மாத வாடகைக்கு ஒரு வீட்டில் வாழ்ந்த விடயம் உங்களுக்குத் தெரியுமா?
வாடகை வீட்டில் குடியிருந்த வில்லியம் கேட் தம்பதி
ஆம், வேல்ஸ் நாட்டிலுள்ள Anglesey தீவில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்துள்ளார்கள் வில்லியம் கேட் தம்பதியர்.
2010ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை அந்த வீட்டில் வாழ்ந்துள்ளார்கள் வில்லியம் கேட் தம்பதியர். அங்குதான் குட்டி இளவரசர் ஜார்ஜும் வளர்ந்துள்ளார். அது இளவரசர் வில்லியம் பிரித்தானிய விமானப்படையில் பணி செய்த நேரம்.
அவர் வேலைக்குச் சென்றுவிட, சில நேரங்களில் இரவுப் பணிக்குச் சென்றுவிட, கேட் தன் குழந்தையுடன் தனித்திருக்கும் நேரம், குடும்ப உறுப்பினர்கள் யாரும் கூட இல்லாமல், தனிமையை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
அப்போது, இளவரசி கேட் தனியாக கடைக்குச் செல்வதையும் மளிகைப்பொருட்கள் வாங்கியதையும் இப்போதும் அங்குள்ள மக்கள் நினைவுகூருகிறார்கள்.
Anglesey தீவில் வில்லியம் கேட் தம்பதியர் வாழ்ந்த அந்த வீடு, Sir George Meyrick என்பவருக்கு சொந்தமானது.
நான்கு படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை, ஒரு சமையலறை, ஒரு உணவருந்தும் அறை மற்றும் இரண்டு குளியலறைகள் கொண்ட அந்த வீட்டின் வாடகை 750 பவுண்டுகள் ஆகும்.
750 பவுண்டுகள் என்பது இலங்கை மதிப்பில் 3,04,747.20 ரூபாய் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |