இளவரசர் வில்லியமும் கேட்டும் மன்னிப்புக் கேட்க வேண்டும்: இளவரசர் ஹரி நிபந்தனை
இளவரசர் ஹரி, ராஜ குடும்பத்துடன் மீண்டும் இணையவேண்டுமானால், இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என ஹரி கருதுவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா வரும் ஹரி
வேல்ஸ் இளவரசரும் வருங்கால மன்னருமான வில்லியமுடைய மனைவியான இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அவரையும் தன் அண்ணனையும் சந்திக்க விரைவில் இளவரசர் ஹரி பிரித்தானியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Image: Getty Images
இளவரசர் ஹரி, இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டிகளுக்காக மே மாதம் பிரித்தானிய வர உள்ளார். அப்போது அவர் தன் சகோதரரான வில்லியமை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளவரசர் ஹரி நிபந்தனை
இதற்கிடையில், இளவரசர் ஹரி ராஜ குடும்பத்துடன் மீண்டும் இணையவேண்டுமானால், இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என ஹரி எதிர்பார்ப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராஜ குடும்ப நிபுணரான Tom Quinn, இளவரசர் ஹரி, தன் அண்ணனுடன் ஒப்புரவாகவேண்டுமென விரும்புகிறார். எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்குள் நல்ல உறவு இருக்கவேண்டும் என்பதற்காக அவர் அப்படி விரும்புவதாக தெரிகிறது.
ஆனாலும், அதற்கு முன், இளவரசர் வில்லியமும், கேட்டும் தங்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என ஹரியும் மேகனும் எண்ணுகிறார்கள் என்கிறார் Tom Quinn.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |