பிரான்ஸ் நாட்டு ஊடகம் மீது வழக்குத் தொடர்ந்த வில்லியம் கேட் தம்பதியர்: தீர்ப்பு விவரம்
பிரித்தானிய இளவரசரான வில்லியம் மற்றும் அவரது மனைவியான கேட், பிரான்ஸ் நாட்டு ஊடகம் ஒன்றின் மீது தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டு ஊடகம் மீது வழக்கு
பிரித்தானிய இளவரசரும், வருங்கால மன்னருமான வில்லியம், தன் மனைவி கேட் மற்றும் தங்கள் பிள்ளைகளுடன் பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதியிலுள்ள ரிசார்ட் ஒன்றிற்கு விடுமுறைக்காக சென்றிருந்தார்கள்.

அப்போது, அவர்களுடைய அனுமதியின்றி பாப்பராசிகள் என்னும் புகைப்படம் எடுப்போர் எடுத்த வில்லியம், கேட் மற்றும் தம்பதியரின் பிள்ளைகளின் புகைப்படங்கள் Paris Match என்னும் பத்திரிகையின் ஏப்ரல் மாத வெளியீட்டில் வெளியாகின.
அதைத் தொடர்ந்து, அந்த பத்திரிகை மீது வில்லியம், கேட் தம்பதியர் வழக்குத் தொடர்ந்திருந்தார்கள்.
தீர்ப்பு விவரம்
வில்லியம் கேட் தம்பதியரின் சட்டத்தரணிகள், தங்கள் தரப்புக்கு இழப்பீடு எதுவும் தேவையில்லை என்றும், அந்த பத்திரிகை தங்கள் தவறை ஒப்புக்கொண்டதை தங்கள் பத்திரிகையில் அறிவிக்கவேண்டும் என்றும் கோரியிருந்தார்கள்.

நீதிமன்றமும், அவ்வாறே அறிவிப்பு வெளியிடுமாறு Paris Match பத்திரிகைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், ஒரு வெளியீட்டுக்கு 10,000 யூரோக்கள் வீதம் அபராதமும், வழக்குச் செலவுக்கான தொகையையும் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, Paris Match பத்திரிகை, தங்கள் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்று, இளவரசர் வில்லியம், கேட் தம்பதியர் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளின் தனிப்பட்ட வாழ்வின் மரியாதையையும், அவர்களுடையை தனியுரிமையையும் மீறியதை ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
கென்சிங்டன் அரண்மனையும், Paris Match பத்திரிகைக்கு எதிரான வழக்கில் வில்லியம், கேட் தம்பதியர் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |