பிரித்தானிய இளவரசர் வில்லியம் மீது இத்தாலி கால்பந்து ரசிகர்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள்
யூரோ கால்பந்து போட்டி தொடர்பில், பிரித்தானிய இளவரசர் வில்லியம் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள் இத்தாலி கால்பந்து ரசிகர்கள்.
யூரோ கால்பந்து ஆட்டத்தின் இறுதிப் போட்டியைக் காண, தனது மனைவி கேட், மகன் ஜார்ஜுடன் Wembley மைதானத்துக்கு வந்திருந்தார் பிரித்தானிய இளவரசர் வில்லியம்.
இங்கிலாந்தும் இத்தாலியும் ஆடிய அந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் முடிவடைய, பெனால்டி அடிப்படையில் இத்தாலி வெற்றி பெற்றது. இந்நிலையில், இளவரசர் வில்லியம் இத்தாலி அணியின் வெற்றிக்காக இத்தாலி ஜனாதிபதி Sergio Mattarellaவை பாராட்டவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்கள் இத்தாலி ரசிகர்கள்.
அத்துடன், இத்தாலிக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்படுவதற்கு முன்பே, அதாவது பரிசு வழங்கும் விழாவுக்கு முன்பே வில்லியம் மைதானத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார், அது அநாகரீகச் செயல் என்றும் சிலர் விமர்சித்துள்ளார்கள்.
ஆனால், இத்தாலி வெற்றி பெற்றதும், Sergio Mattarellaவை வில்லியம் எட்டிப் பார்க்கும் ஒரு காட்சி வெளியாகியுள்ளது. அவர் Mattarellaவை நோக்கி நடக்க முற்படும்போது, வேறொருவர் அவரை வழிமறித்து அவரை பாராட்டிக்கொண்டிருப்பதை அந்த வீடியோவில் காணலாம்.
அத்துடன், வில்லியம் இத்தாலிக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்படுவதற்கு முன்பே புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள கென்சிங்டன் அரண்மனை, பரிசு வழங்கும் விழா முடியும் வரை இளவரசர் வில்லியம் மைதானத்தில்தான் இருந்தார் என்பதை உறுதி செய்துள்ளது.