முதன்முறையாக பிரதமர் இல்லத்திற்கு வருகை புரிந்த இளவரசர் வில்லியம்
Prince William meets Burnham on first Downing Street visit: முதன்முறையாக பிரதமர் இல்லத்திற்கு வருகை புரிந்த இளவரசர் வில்லியம், பிரித்தானிய பிரதமரை சந்தித்துள்ளார்.
பிரித்தானியாவின் வருங்கால மன்னரான இளவரசர் வில்லியம், பிரதமர் இல்லம் சென்று பிரித்தானிய பிரதமரை சந்தித்துள்ளார்.
பிரதமர் இல்லத்திற்கு வருகை புரிந்த இளவரசர் வில்லியம்
இளவரசர் வில்லியம், நேற்று எண் 10, டவ்னிங் தெருவிலுள்ள பிரதமர் இல்லத்திற்குச் சென்றுள்ளார்.

விடயம் என்னவென்றால், வில்லியம், பிரதமர் இல்லத்துக்குச் செலவ்து இதுவே முதல் முறை.
அதுமட்டுமல்ல, 2012ஆம் ஆண்டு, மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்குப் பின் பிரதமர் இல்லம் சென்று பிரதமரை சந்தித்த முதல் நபர் இளவரசர் வில்லியம்தான் என்பதால் இந்த விடயம் சிறப்பம்சம் கொண்டதாகிறது.
பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம், வாரம் ஒருமுறை மன்னரை சந்தித்துவரும் நிலையில், ஆன்டி பர்னாமுக்கும் வில்லியமுக்கும் இடையில் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மரபுப்படி, இளவரசர் வில்லியமும் பிரித்தானிய பிரதமரும் ஆண்டுக்கு ஒரு முறை சந்திக்கவேண்டும். என்றாலும், அந்த சந்திப்பு பிரதமர் இல்லத்தில்தான் நடக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

பொதுவாகவே, இளவரசர் வில்லியம் பல்வேறு புதுமையான விடயங்களைச் செய்துவருபவர் என்னும் நிலையில், அவரது பிரதமர் இல்லை வருகையும் அவற்றில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதற்கிடையில், இவர்கள் இருவருமே ஒரு விடயத்தில் ஒத்த கருத்து கொண்டுள்ளார்கள். அதாவது, வில்லியம், வீடில்லாமல் தெருக்களில் மக்கள் வாழும் நிலையைக் குறைக்கும் நோக்கில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.
பிரதமர் ஆன்டி பர்னாமோ, இங்கிலாந்தில் வீடில்லாமல் தெருக்களில் தூங்கும் மக்களுக்கு ஆதரவளிக்க உறுதியளித்துள்ளார். ஆக, இருவருக்கும் உரையாட பொதுவான விடயங்கள் உள்ளன என்பதை கூறவும் வேண்டுமா என்ன!