பூர்வக்குடியின ராணியை சந்தித்த இளவரசர் வில்லியம்
இளவரசர் வில்லியம், பூர்வக்குடியின ராணி ஒருவரை சந்தித்த விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
பூர்வக்குடியின ராணியை சந்தித்த இளவரசர் வில்லியம்
பிரித்தானிய இளவரசரும், வருங்கால மன்னருமான வில்லியம், மவோரி இன ராணியான Te Arikinui Kuini Nga Wai Hono i te Po என்பவரை நேற்று விண்ட்ஸர் மாளிகையில் சந்தித்தார்.

இந்த மவோரி இன மக்கள், நியூசிலாந்தில் வாழும் பூர்வக்குடியின மக்கள் ஆவர். அவர்கள், 700 ஆண்டுகளுக்கு முன் பாலினேசியா பகுதியிலிருந்து பசிபிக் பெருங்கடலைக் கடந்து நியூசிலாந்தை வந்தடைந்தவர்கள் என நம்பப்படுகிறது.
பிரிட்டிஷ் காலனித்துவம் வேகமாக பரவிவந்த காலகட்டத்தில், மவோரி பழங்குடியினரை ஒன்றிணைக்கவும் மவோரி தலைமைத்துவத்தை வலுப்படுத்தவும் 1850களில் கிங்கிடாங்கா என்ற இயக்கம் நிறுவப்பட்டது.
29 வயதாகும் Nga Wai, தனது பாட்டியான Te Atairangikaahuவுக்குப் பிறகு கிங்கிடாங்கா இயக்கத்தை வழிநடத்திய இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் என்பதால், ராணியாக அவரது நியமனம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இளவரசர் வில்லியமுடனான Nga Waiயின் சந்திப்பு பேசுபொருளானதற்கு மற்றொரு முக்கியக் காரணம், இந்த சந்திப்பு குறித்து இளவரசர் வில்லியம் வெளியிட்ட புகைப்படத்தை லைக் செய்துள்ள லட்சக்கணக்கானவர்களில், துபாய் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகம்மது அல் மக்தூமும் ஒருவர் என்பதுதான்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |