இளவரசர் வில்லியத்திற்கு அளிக்கப்பட்ட புதிய பட்டம்: ஆயிரக்கணக்கான மக்கள் கோபத்துடன் புகார்
இளவரசர் வில்லியம் இனிமுதல் Duke of Cornwall என அறியப்படுவார்.
வேல்ஸ் இளவரசர் என்ற பட்டம், அதன் பின்னால் இருக்கும் சர்ச்சைக்குரிய வரலாறு
பிரித்தானிய இளவரசர் வில்லியத்திற்கு தந்தை மூன்றாம் சார்லஸ் மன்னரால் அறிவிக்கப்பட்ட புதிய பட்டம் தொடர்பில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த பட்டத்திற்கு பின்னால் இருக்கும் சர்ச்சைக்குரிய வரலாறு தான் காரணம் என தெரிவிக்கின்றனர். பிரித்தானியாவின் புதிய மன்னராக தமது கன்னிப்பேச்சில் மூன்றாம் சார்லஸ், தமது மூத்த மகனும் பட்டத்து இளவரசருமான வில்லியத்திற்கு புதிய பட்டம் வழங்கினார்.
@getty
Duke of Cambridge என இதுவரை அறியப்பட்டு வந்த இளவரசர் வில்லியம் இனிமுதல் Duke of Cornwall என அறியப்படுவார். மட்டுமின்றி, வேல்ஸ் இளவரசர் எனவும் அறியப்படுவார்.
இளவரசர் வில்லியம் புதிய பொறுப்புக்கு வந்துள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், வேல்ஸ் இளவரசர் என்ற பட்டம், அதன் பின்னால் இருக்கும் சர்ச்சைக்குரிய வரலாறு உள்ளிட்டவை பல ஆயிரக்கணக்கான மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
குறித்த பட்டமானது 14 ஆம் நூற்றாண்டு வரை வெல்ஷ் பூர்வீக இளவரசர்களால் பயன்படுத்தப்பட்டது. மன்னர் என்பதை குறிக்கும் சொல்லாகவே குறித்த பட்டம் அறியப்பட்டது. மட்டுமின்றி வேல்ஸ் அரச குடும்பத்தினருக்கு வேல்ஸ் இளவரசர் என்ற பட்டம் மதிப்பு மிகுந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
கடைசி பூர்வீக வேல்ஸ் இளவரசர் Llywelyn ap Gryffydd என்பவரே. இவரை 1282ல் ஆங்கிலேய ராணுவ வீரர்கள் மற்றும் இவரது சகோதரர் Dafydd ap Gruffydd இணைந்து படுகொலை செய்தனர்.
ஆனால் இங்கிலாந்தின் மன்னர் முதலாம் எட்வர்ட் மரணதண்டனைக்கு உத்தரவிடுவதற்கு முன்பு Dafydd சில மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தார், மேலும் அவர் 1283ல் கொல்லப்பட்டார்.
@pa
தொடர்ந்து மன்னர் முதலாம் எட்வர்ட் தனது 16 வயது மகன் இரண்டாம் எட்வர்டுக்கு வேல்ஸ் இளவரசர் என்ற பட்டத்தை 1301ல் வழங்க முடிவு செய்தார். இதனையடுத்தே பிரித்தானிய அரச குடும்பம் தங்களது பட்டத்து இளவரசர்களுக்கு வேல்ஸ் இளவரசர் என்ற பட்டத்தை அளித்து வருகிறது.
இளவரசர் சார்லஸ் 9 வயதாக இருக்கும் போது 1958ல் இரண்டாம் எலிசபெத் ராணியாரால் குறித்த பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில அரசியல் காரணங்களால் வேல்ஸ் மக்கள் தற்போதும் இந்த பட்டம் தொடர்பில் கோபத்தில் உள்ளனர்.
சமீபத்தில் சுமார் 9,000 மக்கள் ஒன்றாக, குறித்த வேல்ஸ் இளவரசர் பட்டத்தை கைவிடக்கோரி புகார் மனு அளித்துள்ளனர்.