பில்லியனரான இளவரசர் வில்லியம்: சொத்து மதிப்பில் தந்தையை மிஞ்சினார்
இளவரசர் வில்லியமுடைய சொத்து மதிப்பு, மன்னர் சார்லசுடைய சொத்து மதிப்பைவிட அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னரால் வெளியான தகவல்
பிரித்தானிய வரலாற்றிலேயே முதன்முறையாக, மன்னர் சார்லஸ் தான் செலுத்தும் வரி விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அவர், 2024 - 25ஆம் ஆண்டு காலகட்டத்துக்காக, 12.9 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மன்னரும் வில்லியமும் தங்கள் வரி விவரங்களை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து மற்றொரு உண்மை தெரியவந்துள்ளது.
அதாவது, இளவரசர் வில்லியமுடைய சொத்து மதிப்பு, மன்னர் சார்லசின் சொத்து மதிப்பைவிட அதிகமாக உள்ளது.

ஆம், மன்னர் சார்லசின் சொத்து மதிப்பு 640 மில்லியன் பவுண்டுகள். அதே நேரத்தில், இளவரசர் வில்லியமுடைய சொத்து மதிப்போ, 1.2 பில்லியன் பவுண்டுகள். அதாவது, தந்தை மில்லியனராக இருக்க, மகன் பில்லியனராகியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |