அந்த ஒரு பயம்... பாரிஸ் ஒலிம்பிக்கை தவறவிட்டது குறித்து இளவரசர் வில்லியம்
கோவிட் மற்றும் தமது மனைவியின் உடல் நிலை குறித்த அச்சம் காரணமாகவே பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண பயணப்படவில்லை என இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
அரச குடும்பம் கவரப்பட்டது
பிரித்தானியாவின் முதன்மையான சில நீச்சல் வீரர்களை நேரில் சந்தித்துள்ள வேல்ஸ் இளவரசர் வில்லியம், தமது நிலையை விளக்கியுள்ளார். ஆனால் பிரித்தானிய வீரர்களின் விளையாட்டுகளால் அரச குடும்பம் கவரப்பட்டது என்று அவர்களுக்கு உறுதியளித்தார்.
வியாழக்கிழமை Gateshead பகுதியில் அமைந்துள்ள நீச்சல் பயிற்சி மையத்தில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இளவரசர் வில்லியம் கலந்துகொண்டார்.
அப்போது ஒலிம்பிக் சேம்பியன்கள் Adam Peaty மற்றும் Tom Dean ஆகியோருடன் கலந்துரையாடினார். ஒலிம்பிக் போட்டிகளின் போது Adam Peaty கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டதை குறிப்பிட்ட இளவரசர் வில்லியம்,
மனைவி கீமோ சிகிச்சையில்
பாரிஸ் நகருக்கு பயணப்பட வேண்டும் என ஆசை இருந்தது என்றும், கோவிட் தொடர்பில் ஒருவர் பகிர்ந்து கொண்ட தகவலை அடுத்து, முடிவு செய்ததாகவும் வில்லியம் தெரிவித்துள்ளார்.
அப்போது தமது மனைவி கீமோ சிகிச்சையில் இருந்தார், அதனாலையே பாரிஸ் பயணத்தை தவிர்த்ததாகவும், தேவையின்றி, கோவிட் தொற்றை வீட்டுக்கு கொண்டுவர வேண்டாம் என முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஒவ்வொரு நாளும் ஒலிம்பிக் போட்டிகளை தவறாமல் கண்டு களித்ததாக வில்லியம் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |