இனி இவர்தான்... பிரித்தானியாவில் மன்னராட்சிக்கு வழிவகுக்கும் இளவரசர் சார்லஸ் அல்லவாம்!
பிரித்தானிய ராஜ குடும்பம் தொடர்ந்து அவப்பெயரை சம்பாதித்து வருகிறது...
இளவரசர் ஆண்ட்ரூ இளம்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு ஒரு புறம், இளவரசர் ஹரியும் அவரது மனைவியும் மூத்த ராஜ குடும்ப பொறுப்புக்களை உதறி பிரித்தானியாவிலிருந்தே வெளியேறியது மறுபுறம் என அடுக்கடுக்காக பிரச்சினைகள்.
இப்படிப்பட்ட நேரத்தில் மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் மரணமடைய, ராஜ குடும்பத்தைத் தோள் கொடுத்து தூக்கிவிட ஒருவர் புறப்பட்டிருக்கிறார்.
அவர்தான் மகாராணியாருக்கு அடுத்து மன்னராவார் என பலரும் ஆரூடம் சொல்லத்தொடங்கிவிட்டார்கள்.
இந்நிலையில், ராஜ குடும்ப வரலாற்றாளரான Robert Lacey என்பவர், ராஜ குடும்பம் சிக்கலான ஒரு சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில், இளவரசர் வில்லியம், தானே முன்வந்து எடுத்துவரும் நடவடிக்கைகளால் மன்னராட்சி முன்னோக்கிச் செல்ல வழிவகை செய்துள்ளார் என்கிறார்.
குறிப்பாக இளவரசர் பிலிப்பின் மரணத்துக்குப் பின், ராஜ குடும்பத்தின் மூத்த மூன்று உறுப்பினர்களில் ஒருவராக அவர் உயர்ந்துள்ளார் என்று கூறும் Robert Lacey, அவர் ராஜ குடும்பத்துக்கு இளரத்தம் பாய்ச்சும் ஒருவராக ஆகியுள்ளார் என்கிறார்.
ஆக, அடுத்து மன்னராட்சியைத் தொடர வழிவகை செய்வது இளவரசர் சார்லஸ் அல்ல, இளவரசர் வில்லியம்தான் என்கிறார் அவர்.