இளவரசர் ஹரியின் பட்டத்தைப் பறிக்க திட்டம்: பரபரப்பு தகவல்
Prince William plans to strip Harry of his titles when he's King: இளவரசர் வில்லியம் மன்னராகும்போது, இளவரசர் ஹரியுடைய பட்டத்தைப் பறிக்க இருப்பதாக ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இளவரசர் வில்லியம் மன்னராகும்போது, ராஜ குடும்ப அமைப்பில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய இருப்பதாக ராஜ குடும்ப எழுத்தாளரான டாம் ஸ்கைஸ் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரியின் பட்டத்தைப் பறிக்க திட்டம்
அதாவது, இளவரசர் வில்லியமுடைய திட்டப்படி, அரசில் பொறுப்பு வகிக்கும் ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே பட்டங்கள் வழங்கப்படும்.

இது குறித்து இளவரசர் வில்லியமுடைய நண்பர் ஒருவர் டாம் ஸ்கைஸிடம் கூறும்போது, ராஜ குடும்பத்திலுள்ள ஒருவர், மூத்த ராஜ குடும்ப உறுப்பினராக, வெளிநாடுகளுக்கு தூதரக பணி செய்யவோ, அல்லது உள்நாட்டில் அரசுக்கு ஏதாவது ஒரு வேலை செய்யவோ செய்தால் மட்டுமே, அவருக்கு HRH பட்டம் வழங்கப்படும்.
அவருக்கு இளவரசர் பட்டமும், தங்க ஒரு வீடும், ஊதியமும் வழங்கப்படும்.
அப்படி வேலை செய்யாவிட்டால், அவருக்கு HRH பட்டமோ இளவரசர் பட்டமோ, தங்க இலவச அல்லது சலுகை கட்டண வீடோ, ஊதியமோ வழங்கப்படாது, அவரது வருவாயை அவர்தான் ஈட்டிக்கொள்ளவேண்டும்.
அப்படியானால், இளவரசர் ஹரி, அவரது மனைவியான மேகன், தம்பதியரின் பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுக்கும் இந்த சலுகைகள் கிடைக்காது என்பதுடன், அவர்களுடைய HRH பட்டமும் இளவரசர் பட்டமும் பறிக்கப்படும்.

விடயம் என்னவென்றால், ஹரியும் மேகனும் ஏற்கனவே வில்லியமுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவரும் நிலையில், வில்லியமுடைய இந்த திட்டத்தால் இருவருக்குமான பிளவு அதிகரிக்கப்போகிறது என்பதில் மட்டும் எவ்வித சந்தேகமுமில்லை!