தனது முடிசூட்டு விழாவிற்கான திட்டமிடலை துவங்கிய இளவரசர் வில்லியம்: கசிந்த தகவல்
தந்தையை போன்று தமக்கும் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முடிசூட்டு விழா முன்னெடுக்கப்பட வேண்டும் என இளவரசர் வில்லியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேல்ஸ் இளவரசர் வில்லியம் திட்டம்
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா மே 6ம் திகதி முன்னெடுக்கப்பட்டது. அந்த விழாவில் வேல்ஸ் இளவரசர் வில்லியத்தின் திட்டமிடலும் இருந்துள்ளதாக கூறுகின்றனர்.
Credit: AP
மேலும், முடிசூட்டு விழாவானது நவீனமாகவும் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் என வில்லியம் விரும்புவதாக தகவல் கசிந்துள்ளது. மட்டுமின்றி, முடிசூடும் மன்னருக்கு மக்கள் அஞ்சலி செலுத்தும் சர்ச்சைக்குரிய நிகழ்வு ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் வில்லியம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, இதுவரையான ராஜ குடும்பத்து பாரம்பரியங்களை இளவரசர் வில்லியம் பின் பற்ற தயங்குவதாகவும், எதிர்காலத்துக்கு பொருந்துவது போல் முடிசூட்டு விழாவை முன்னெடுக்க வேண்டும் என வில்லியம் திட்டமிட்டு வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
அவரது காலம் வரும்போது முடிசூட்டு விழாவானது நவீனமாகவும் ஆனால் தேசத்தையும் காமன்வெல்த் நாடுகளையும் ஒன்றிணைக்கும் விழாவாகவும் இருக்க வேண்டும் என வில்லியம் தெரிவித்துள்ளாராம்.
பரம்பரை வழக்கங்களை முறியடிக்கும்
அவரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், கண்டிப்பாக மிக வித்தியாசமாக இருக்கும் அவரது முடிசூட்டு விழா என்கிறார்கள். சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவும் பரம்பரை வழக்கங்களை முறியடித்து, வேறு மதத் தலைவர்களும் விழாவில் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Credit: Splash
மட்டுமின்றி, ராணியாரின் முடிசூட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக 8,000 பேர்கள் கலந்துகொண்ட நிலையில், சார்லஸ் மன்னர் 2,300 சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தார்.