பொது மன்னிப்புக் கோர இருக்கும் ஹரி: இளவரசர் வில்லியம் நிலைப்பாடு என்ன?
இளவரசர் ஹரி பொது மன்னிப்புக் கோரினாலும், இளவரசர் வில்லியம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய இளவரசரான ஹரி, மீண்டும் ராஜ குடும்பத்துடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் பொது மன்னிப்புக் கோர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரவேற்கும் தந்தை
ஹரியின் தந்தையான மன்னர் சார்லசைப் பொருத்தவரை, தன் மகனை மீண்டும் வரவேற்பது அவருக்கு மகிழ்ச்சியே.

காரணம் என்னவென்றால், ஹரியின் பிள்ளைகளான தனது பேரப்பிள்ளைகளை சந்திக்க அவர் ஆவலாக உள்ளார்.
ஆகவே, மீண்டும் ஹரி ராஜ குடும்பத்துடன் ஒப்புரவானால், அது மன்னருக்கு மகிழ்ச்சியைத்தான் ஏற்படுத்தும்.

ஆனால், இளவரசர் வில்லியமைப் பொருத்தவரை, ஹரி பொது மன்னிப்புக் கோருவதால் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Grant Harrold என்பவர்.
நான் கேள்விப்பட்டவரை, இளவரசர் வில்லியம் ஹரியுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார் என்கிறார் Grant Harrold.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |