பிரித்தானியா திரும்பிய ஹரி, மேகன்... மௌனம் காக்கும் வில்லியம், கேட் தம்பதியர்
Prince William and Kate's real reason for silence after Harry and Meghan's UK return: ஹரி தன் மனைவி பிள்ளைகளுடன் பிரித்தானியா திரும்பியுள்ள நிலையில், இளவரசர் வில்லியமும், அவரது மனைவியான கேட்டும் ஏன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி, தன் மனைவி பிள்ளைகளுடன் பிரித்தானியா திரும்பியுள்ளது அனைவரும் அறிந்ததே.
ஆனால், அது குறித்து இதுவரை இளவரசர் வில்லியமும், அவரது மனைவியான கேட்டும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
காரணம் என்ன?
இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான கேட்டும், ஹரி, மேகன் குறித்து அவசரப்பட்டு ஏதாவது வார்த்தையை விட்டுவிடக்கூடாது என்பதாலேயே மௌனம் காப்பதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அது ஒரு தனிப்பட்ட விடயம் என்பதாலும், அவர்கள் எந்தக் கருத்தும் வெளிப்படையாகக் கூறவில்லை என்றும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.
அவர்கள் நடப்பதைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள், எதையாவது வெளிப்படையாகச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் கருதுகிறார்கள் என்கிறார்கள் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

ஹரியும் வில்லியமும் ஒருவேளை சமரசம் ஆவார்கள் என்றால், அதற்கு நீண்ட காலம் ஆகலாம் என்று கூறும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், ஏனென்றால், தங்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டது என்னும் ஒரு எண்ணம் இன்னமும் வில்லியம் கேட் தம்பதியருக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |