கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இளவரசர் வில்லியம்: அவரே பகிர்ந்த அதிகாரப்பூர்வ தகவல்
கொரோனா தடுப்பூசி முதல் டோஸை பிரித்தானியா இளவரசர் வில்லியம் போட்டுக்கொண்டார்.
லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் NHS ஊழியரிடம் இளவரசர் வில்லியம் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தான் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது அதிகாரிப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இளவரசர் வில்லியம், செவ்வாய்க்கிழமை நான் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.
தடுப்பூசி போடும் பணியில் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி, உங்கள் சேவையை தொடர்ந்து செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.
38 வயதான இளவரசர் வில்லியம் மனைவி கேட் மற்றும் 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
On Tuesday I received my first dose of the COVID-19 vaccine.
— The Duke and Duchess of Cambridge (@KensingtonRoyal) May 20, 2021
To all those working on the vaccine rollout - thank you for everything you’ve done and continue to do. pic.twitter.com/8QP6ao5fEb
இளவரசர் வில்லியமுக்கு எந்த தடுப்பூசி போடப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை.
அவர் 40 வயதிற்குட்பட்டவர் என்பதால் இளவரசர் வில்லியமுக்கு Pfizer அல்லது AstraZeneca தடுப்பூசி தான் போடப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.