ஆறு ஆண்டுகளில் இளவரசர் வில்லியமுக்கு முக்கிய பொறுப்பு: ஆரூடம் கூறும் பெண்
இன்னும் ஆறு ஆண்டுகளில் இளவரசர் வில்லியமுக்கு முக்கிய பொறுப்புகள் கையளிக்கப்படும் என ஜோதிட நிபுணரான பெண் ஒருவர் ஆரூடம் கூறியுள்ளார்.
இளவரசர் வில்லியமுக்கு முக்கிய பொறுப்புகள்
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவைத் தொடர்ந்து ராஜ குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து Inbaal Honigman என்னும் ஜோதிடக்கலைஞரான பெண் கணித்துள்ளார்.
இளவரசர் வில்லியமுக்கு இன்னும் ஆறு ஆண்டுகளில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார் Inbaal. 2040வாக்கில், மன்னருடைய பணிகளில் முக்கியமான பெரும்பாலான பணிகளை வில்லியம்தான் செய்வார் என்று கூறுகிறார் Inbaal.
Getty
அப்படியானால் மன்னர் பதவி விலகுவாரா?
மன்னர் சார்லசுடைய ஆட்சிக்காலம் பல கட்டங்கள் கொண்டதாக இருக்கும் என்று கூறும் Inbaal, முதல் ஆறு ஆண்டுகள், மன்னர் மிகத்தீவிரமாக தன் பணிகளில் ஈடுபடுவார் என்கிறார்.
ஆனால், அதைத் தொடர்ந்து வரும் 10 ஆண்டுகள், அதாவது 2030 முதல் 2040 வரை என்று வைத்துக்கொள்ளலாம், மன்னர் சார்லஸ் தனது பணிகளில் பெரும்பாலானவற்றில் இளவரசர் வில்லியமை இணைத்துக்கொள்வார் என்கிறார் Inbaal.
Instagram/inbaalpsychic
சொல்லப்போனால், திடீரென வில்லியம் ஆட்சிப்பொறுப்பை ஏற்க நேர்ந்தால், ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்காக, அவர் பயிற்சி எடுத்துக்கொள்வது குறித்த விடயங்கள் வெளிப்படையாகவே இருக்கும் என்கிறார் அவர்.
2040வாக்கில் தன்னுடைய எல்லா பணிகளையுமே செய்ய மன்னர் சார்லஸ் இளவரசருக்கு வாய்ப்பளிப்பார் என்றும், மன்னர் குறைந்த பணிகளிலேயே ஈடுபடுவார் என்றும் கூறுகிறார் அவர். அப்படியானால், வில்லியமுக்கு வழிவிட்டு மன்னர் பதவி விலகுவாரா என்றால், பதவி விலக மன்னர் தயக்கம் காட்டுவார் என்கிறார் Inbaal.
Getty