கண் பார்வையில் ஏற்பட்ட பிரச்சினையும் நன்மைக்கே என்று கூறும் இளவரசர் வில்லியம்: பின்னணியில் ஒரு பயம்
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விடயம் பயத்தை ஏற்படுத்தும்.
ஒரு குறிப்பிட்ட விடயத்துக்காக பயப்படுவதை ஆங்கிலத்தில் ஃபோபியா (phobia) என்கிறார்கள்.
சிலர் உயரமான இடங்களுக்குச் செல்ல பயப்படுவார்கள், சிலர் இருட்டைப் பார்த்தால் பயப்படுவார்கள், இப்படி ஒரு குறிப்பிட்ட விடயத்துக்காக பயப்படுவதை ஆங்கிலத்தில் ஃபோபியா (phobia) என்கிறார்கள்.
இளவரசர் வில்லியம் மற்றும் ஹரிக்கும் கூட ஒரு விடயம் பயத்தை ஏற்படுத்துமாம்.
ஆம், மக்கள் கூட்டத்தின் முன் நின்று பேசுவதற்கு இருவருக்குமே பயமாம்.
தனது பயத்தை தான் எப்படி சமாளித்தேன் என்பது குறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார் இளவரசர் வில்லியம்.
அதாவது, வயது ஏற ஏற இளவரசர் வில்லியமுக்கு கண் பார்வையில் கொஞ்சம் குறைபாடு ஏற்பட்டதாம். ஆனால், அதையும் பாஸிட்டிவாக பயன்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார் வில்லியம்.
ஆம், ஒரு பெரிய கூட்டத்தின் முன் நின்று பேசும்போது, கண்களில் கான்டாக்ட் லென்ஸ் அணியாமல் நின்று பேசுவாராம் வில்லியம். அதாவது, தன் முன் நிற்பவர்களின் முகத்தைப் பார்த்தால்தானே பயம் வரும், கான்டாக்ட் லென்ஸ் அணியாவிட்டால், முன்னால் நிற்பவர்களுடைய முகம் தெளிவாகத் தெரியாது. யார் தன்னை உற்றுப்பார்க்கிறார்கள் என்பதும் தெரியாது.
அப்படித்தான் தான் தனது ஃபோபியாவை, அதாவது பயத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார் இளவரசர் வில்லியம்.