இனி இவர்தான், இப்படித்தான்... இளவரசர் வில்லியம் குறித்து வெளியாகியுள்ள தகவல்
மன்னர் சார்லஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலவீனமாகக் காணப்படும் நிலையில், இளவரசர் வில்லியம் அதிகாரத்தைக் கையில் எடுப்பதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இனி இவர்தான், இப்படித்தான்...
ராஜ குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர்களை மறக்கச்செய்து, பொதுமக்கள் பார்வையில் ராஜ குடும்பத்தின் இமேஜை உயர்த்த இளவரசர் வில்லியம் முடிவு செய்துள்ளதாக ராஜ அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இனி ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையில்லாமல் சலுகைகள் வழங்குவதில்லை என்னும் நிலையை உருவாக்க விரும்பும் வில்லியம், செலவுகளை உற்றுக் கவனிக்க இருப்பதாகவும், தேவையற்ற செலவுகள் என கருதப்படும் நிலையில், அந்த செலவுகளை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
தான் ஆட்சிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நன்கு உணர்ந்துள்ள வில்லியம், இதுவரை ராஜ குடும்பத்தில் ஆட்சி செய்தவர்களிலேயே கட்டுப்பாடான நபராக இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கிறார் ராஜ அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த அந்த நபர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |