இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த பிரித்தானிய இளவரசர்
விளையாட்டுகளில் இருக்கும் இனவாதத்துக்கு எதிராக கால்பந்து விளையாட்டு வீரர்கள் அறிவித்துள்ள சமூக ஊடக புறக்கணிப்பில் பிரித்ததானிய இளவரசர் வில்லியம் இணைந்துள்ளார்.
Union of European Football Associations மற்றும் ஃபார்முலா ஒன் டிரைவர் லூயிஸ் ஹாமில்டன் ஆகியோரின் ஆதரவைப் பெற்ற முக்கிய கால்பந்து கிளப்புகள் நடத்தும் அரிய சமூக ஊடக ஆர்ப்பாட்டத்தில் இளவரசர் வில்லியம் இணைந்தார்.
விளையாட்டுகளில் இனவாதம், துஷ்பிரயோகம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமையைக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டு இந்த மூன்று நாள் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. பிரச்சாரத்தில் பங்கேற்பவர்கள் மூன்று நாட்களுக்கு சமூக வலைத்தளங்களை புறக்கணிக்கவுள்ளனர்.
இது குறித்து இளவரசர் வில்லியம் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஆதரவை அறிவித்துள்ளார். அதில் "FA-வின் தலைவர் என்ற வகையில் நான் முழு கால்பந்து சமூகத்துடனும் இந்த வார இறுதியில் சமூக ஊடக புறக்கணிப்பில் இணைகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ட்விட்டர் பக்க புகைப்படத்தை பதிவிட்ட வில்லியம், "வீரர்கள் மற்றும் கால்பந்து சமூகத்தில் உள்ள பலர் ஆன்லைனில் தொடர்ந்து பெறப்பட்ட துஷ்பிரயோகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த வார இறுதியில், இங்கிலாந்தில் உள்ள கால்பந்து சமூகத்தில் ஏப்ரல் 30 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மே 3 திங்கள் இரவு 11.59 மணி வரை சமூக ஊடக புறக்கணிப்புக்கு ஒன்றுபடுவோம்” என கூறியுள்ளார்.