இளவரசர் வில்லியம் தனது சொந்த முடிசூட்டு விழாவை பற்றி அதிகம் சிந்திக்கிறாரா? வெளியான மர்மம்
இளவரசர் வில்லியம் மன்னர் முடிசூட்டு விழாவிற்கான பணிகளில், ஆர்வம் எடுத்துக் கொள்ளவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
முடிசூட்டு விழா
பிரித்தானியாவிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில், மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விழா நடந்து முடிந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் , இளவரசர் வில்லியம், தனது சொந்த முடிசூட்டு விழாவை பற்றி திட்டமிட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.
@reuters
மன்னர் சார்லஸின் மூத்த மகனான அவர், தனது நெருங்கிய ஆலோசகர்களிடம், தனது தந்தைக்கு நடத்தப்பட்ட முடிசூட்டு விழாவை விட சிறப்பாக, வித்தியாசமான முறையில் முடிசூட்டு விழாவை நடத்த வேண்டுமென பேச்சு வார்த்தை நடத்தியதாக, சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
@bbc
மேலும் இளவரசர் வில்லியம் முடிசூட்டு விழாவை, நவீன காலத்திற்கு ஏற்றார் போல் நடத்த விரும்புவதாகவும், சர்ச்சைக்குரிய மக்கள் மரியாதை நிகழ்வை, அகற்ற விரும்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமில்லாமல் இருந்த இளவரசர்
இந்நிலையில் நடந்து முடிந்த மன்னர் முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாட்டில், இளவரசர் வில்லியம் அவ்வளவு ஆர்வமாக செயல்படவில்லை எனவும், மேலும் தனது தந்தையின் முடிசூட்டு விழாவை நடத்துவதற்கான வாய்ப்பை நிராகரித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
@getty images
ஆனால் வில்லியம் தனது சொந்த முடிசூட்டு விழாவை வரலாற்று சிறப்புமிக்க வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில், நடத்த விரும்புவதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் பிபிசி செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய வில்லியம்
‘அரச குடும்பம் நவீனமயமாக்கப்பட வேண்டும் மற்றும் முன்னேற வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அது பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
அதுதான் எனக்கு சவாலாக இருக்கிறது,
அடுத்த 20 வருடங்களில் அரச குடும்பத்தை எப்படி பொருத்தமானதாக மாற்றுவது? என்னால் ஏதாவது செய்ய முடியும் என்று நம்புகிறேன்." என அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.