தனது ரகசிய சகோதரியுடன் பண்டிகை கொண்டாடவிருக்கும் இளவரசர் வில்லியம்...
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது ரகசிய சகோதரி மற்றும் சகோதரருடன் இளவரசர் வில்லியம் கொண்டாட இருப்பதாக சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய விருந்தினர்கள்
எலிசபெத் மகாராணியார் உயிருடன் இருந்தபோது, அவர் தனது மொத்த குடும்பத்தினருடனும், Sandringham இல்லத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம்.
இம்முறை Sandringham இல்லத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் விருந்தினர்கள் பட்டியலில் முக்கிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
Getty
ஆம், ராணி கமீலாவின் பிள்ளைகளும் இம்முறை ராஜ குடும்பத்தினருடன் Sandringham இல்லத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட இருக்கிறார்கள்.
ராணி கமீலாவின் முதல் திருமணம் மூலம் பிறந்த பிள்ளைகள், வில்லியம், ஹரிக்கு சகோதர சகோதரி உறவு முறை என்பதால், அதைத்தான், இளவரசர் வில்லியம் தனது ரகசிய சகோதரியுடன் பண்டிகை கொண்டாடவிருப்பதாக செய்தியாக வெளியிட்டுள்ளன பிரித்தானிய ஊடகங்கள்.
இளவரசர் வில்லியமுடைய ரகசிய சகோதரியும் சகோதரரும்
ஒரு காலத்தில் தனது தவறான முடிவுகளால் ராஜ குடும்பத்தையே குழப்பிய கமீலா, சார்லசைக் காதலித்துவிட்டு, ஆண்ட்ரூ பார்க்கர் பௌல்ஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
கடமைக்காக டயானாவைத் திருமணம் செய்துகொண்டாலும் சார்லசின் மனம் கமீலாவிடமே இருந்தது. மீண்டும் சார்லஸ் கமீலாவின் உறவு ரகசியமாகத் தொடர, அது வெளியே தெரியவந்து ராஜ குடும்பத்தில் பெரும் குழப்பம் வெடிக்க, சார்லஸ் விவாகரத்தில் துவங்கி, டயானாவின் மரணத்தில் அது முடிந்தது.
Getty
அப்படி ஆண்ட்ரூவுடனான திருமணம் மூலம் கமீலாவுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் Laura Lopes (45) மற்றும் Tom Parker Bowles (48). கமீலா, சார்லசைத் திருமணம் செய்துகொண்டதால், அவர்கள், இளவரசர்கள் வில்லியமுக்கும் ஹரிக்கும் சகோதர சகோதரி உறவுமுறையாகிவிட்டார்கள்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், கமீலாவின் பிள்ளைகளுக்கு Sandringham இல்லத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், மன்னர் சார்லசுடைய இளைய மகனான இளவசர் ஹரிக்கும் அவரது மனைவிக்கும் அழைப்பு இல்லையாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |