அண்ணியான கேட் மிடில்டன் தொடர்பில் இளவரசர் ஹரி சொன்ன கருத்து! மன வருத்தமடைந்த வில்லியம்
கேட் மிடில்டனைப் பற்றி இளவரசர் ஹரியின் கருத்து இளவரசர் வில்லியமை மன வருத்தமடைய செய்துள்ளது.
ஹரி - வில்லியம்
ஹரி மற்றும் மேகனின் நெட்ஃபிக்ஸ் தொடரின் முதல் பாகத்தில் தான் ஹரி கருத்து தெரிவித்திருக்கிறார். இளவரசர் வில்லியமின் நண்பர்களை மேற்கோள்காட்டி டெய்லி மெயில், இளவரசர் வில்லியம் கேட் மிடில்டனை காதலிப்பதற்காக அல்லாமல் அரச குடும்பத்தில் அங்கமாக இருக்க அச்சுக்கு ஏற்றது போல இருக்கவே திருமணம் செய்துகொண்டார் என்று ஹரி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் இந்த கருத்து வில்லியமை மன வருத்தம் அடைய செய்துள்ளது. மேலும் ஹரி கூறுகையில், இது போல திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் வலி மற்றும் துன்பத்தில் இருந்து நான் பல விடயங்களை கற்று கொண்டேன், தனது தாயார் டயானா தொடர்பிலேயே இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
Getty Images
எனக்காக மேகன் செய்த தியாகம்
நான் மேகனைச் சந்திக்க நேர்ந்தபோது, ஊடகங்களால் அவர் விரட்டப்படுவதைப் பற்றி நான் பயந்தேன், அதே ஊடகம் என்னிடமிருந்து பலரை விரட்டியது. என்னுடன் என் உலகில் சேர, மேகன் தான் அறிந்த அனைத்தையும், தனது சுதந்திரத்தையும் தியாகம் செய்தார்.
அதன்பிறகு மிக விரைவில் அவருடைய உலகில் அவருடன் சேர எனக்குத் தெரிந்த அனைத்தையும் தியாகம் செய்தேன் என கூறியுள்ளார்.
SAEED KHAN/AFP/GETTY IMAGES