ஐக்கிய அரபு அமீரகத்தை பார்வையிட்ட இங்கிலாந்து இளவரசர்: உறவு வலுப்பெற்றதாக அறிவிப்பு!
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் வெளிநாட்டு பயணமாக, முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் மூலம் அங்குள்ள இளம் அமீரக தலைவர்கள் , அதிகாரிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் ஆகியோரை சந்தித்து சுற்றுசூழல் பாதுகாப்பது குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இங்கிலாந்தின் இளவரசர் இரண்டு வருடங்களுக்கு பிறகு மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடந்த வியாழக்கிழமை சென்றுள்ளார். இந்த பயணமானது ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது ஆண்டு விழாவும், இங்கிலாந்தின் தேசிய தினமும் ஆன வியாழன் அன்று நிகழ்ந்துள்ளது.
First stop?the Jubail Mangroves, a nature preserve and a haven for avian and marine species native to Abu Dhabi ?? pic.twitter.com/zIxGIcdPiI
— The Duke and Duchess of Cambridge (@KensingtonRoyal) February 10, 2022
இந்த பயணத்தின் முதல் பகுதியாக விலங்குகளுக்கான இயற்கைப் பாதுகாப்பு பகுதியான ஜுபைல் சதுப்புநில பகுதியை பார்வையிட்டு, அங்குள்ள சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திற்கு எதிராக போராடும் யுனைடெட் ஃபார் வைல்ட் லைஃப் என்ற அமைப்பில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் மூலம் இளவரசர் வில்லியம் அங்குள்ள தனித்துவமான தாவர விலங்குகளை பற்றி கேட்டறிந்தார். அத்துடன் United for Wildlife மற்றும் The Earthshot Prize ஆகிய இரு ராயல் அறக்கட்டளை திட்டங்கள் முதன்மைபடுத்தியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக உலகின் மிக பரபரப்பான துறைமுகங்களின் ஒன்றான ஜெபேல் அலி துறைமுகத்தை பார்வையிட்டு அங்கு நடைபெறும் சந்தேகத்திற்கு இடமான சரக்கு போக்குவரத்தை எவ்வாறு AI தொழிநுட்பம் கண்டறிகிறது போன்ற தகவல்களை கேட்டறிந்தார்.
இறுதியாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் துபாய் 2020 கண்காட்சியை பார்வையிட்டு பேசிய Duke of Cambridge, இந்த கண்காட்சி உங்களை கவர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன், இந்த உலகத்தை சரி செய்து அழகாகும் மிகப்பெரியாக பெரிய பணி நம்மிடம் உள்ளது, அதை திறம்பட செய்வோம் என தெரிவித்தார்.
மேலும் இந்த பயணம் மூலம் இருநாட்டு வர்த்தக, பாதுகாப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு போன்ற உறவுகளில் வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.