ஹரியை மன்னிக்க மன்னர் தயார்... ஆனால் இளவரசர் வில்லியம் தயங்குகிறார்: காரணம் என்ன?
இளவரசர் ஹரி தனது சுயசரிதைப்புத்தகமாகிய ஸ்பேர் என்னும் புத்தகத்தில் தனது குடும்பத்தினரைக் குறித்து மோசமாக விமர்சித்திருந்தார்.
குறிப்பாக ஒரு விடயம் மன்னரையும் இளவரசர் வில்லியமையும் கடும் கோபமடையச் செய்தது.
மன்னரையும் வில்லியமையும் கடும் கோபமடையச் செய்த விடயம்
மன்னருடைய மனைவியாகிய ராணி கமீலாவையும், இளவரசர் வில்லியமுடைய மனைவியாகிய இளவரசி கேட்டையும் ஹரி மோசமாக விமர்சித்திருந்ததே அவர்கள் இருவரையும் கடும் கோபமடையச் செய்தது.
ஹரியின் விமர்சனத்துக்கு மன்னர் எந்த வகையிலும் பதிலளிக்கவில்லை. சொல்லப்போனால் அவருடைய கோபம் காலப்போக்கில் குறையலாம்.
ஆனால், வில்லியம் ஹரியை மன்னிக்கத் தயாரில்லை. தனது அன்பு மனைவியும், ஹரியை சொந்தத் தம்பி போல் நேசித்தவருமான கேட்டை ஹரி விமர்சித்ததை வில்லியமால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்கிறார்கள் ராஜ குடும்ப நிபுணர்கள்.
அத்துடன், தங்கள் குடும்பத்தைக் குறித்து வெளிப்படையாக விமர்சித்ததால், ஹரியையும் மேகனையும் நம்ப முடியாது என்னும் ஒரு நிலையும் உருவாகியுள்ளது. அது சகோதரர்களுக்கிடையிலான பிரிவை அதிகமாக்கியுள்ளது.
இதற்கிடையில், ஹரி, ராணி கமீலாவை ’மோசமான சித்தி’ என்பது உட்பட பல வார்த்தைகளால் விமர்சித்திருந்ததால், ஹரியை மன்னர் சார்லஸ் மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் ஏற்றுக்கொள்ள, ராணி கமீலா கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |