திருமண மோதிரம் அணியாமல் காணப்படும் இளவரசர் வில்லியம்
இளவரசர் ஹரியைப் போலில்லாமல், இளவரசர் வில்லியம் தன் கையில் திருமண மோதிரம் அணியாமல் காணப்படுகிறார்.
திருமண மோதிரம் அணியாமல் காணப்படும் வில்லியம்
மேலை நாடுகளில் பிரபலங்கள் ஒருநாள் திருமண மோதிரம் அணிய மறந்துவிட்டால் கூட, அவர்களுடைய திருமண வாழ்க்கையில் ஏதோ பிரச்சினை என்னும் அளவில் செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் உண்டு.
ஆனால், இளவரசர் வில்லியம் தன் கையில் திருமண மோதிரம் அணியாமல்தான் காணப்படுகிறார்.
GETTY
ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, இளவரசர் வில்லியமுக்கும் இளவரசி கேட் மிடில்டனுக்கும் 15ஆவது ஆண்டு திருமண நாள் விழா ஆகும்.
ஆனால், அன்றும் வில்லியம் தனது திருமண மோதிரத்தை அணியமாட்டார் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
அதற்கு ஒரே காரணம்தானாம். இளவரசர் வில்லியமுக்கு நகைகள் அணிய பிடிக்காதாம். ஆகவேதான் மோதிரம் முதலான எந்த நகைகளையும் அவர் அணிவதில்லை என்கிறது அரண்மனை வட்டாரம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |