மன்னர் சார்லஸ் அளித்த கிறிஸ்துமஸ் விருந்தில் வில்லியம் குடும்பம் இல்லை: என்ன காரணம்?
பிரித்தானியாவில், மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடத் துவங்கிவிட்டார்களோ இல்லையோ, ராஜ குடும்பத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன.
மன்னர் சார்லஸ் அளித்த கிறிஸ்துமஸ் விருந்து
மன்னர் சார்லஸ், பக்கிங்காம் அரண்மனையில் தனது குடும்பத்தினருக்கு விருந்தொன்றை அளித்துள்ளார்.
ஆனால், அதில் இளவரசர் வில்லியம், கேட் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் கலந்துகொள்ளவில்லை.
அத்துடன், மன்னரின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது குடும்பத்தினரும் கூட, கலந்துகொள்ளவில்லை.
ஆண்ட்ரூ சீன உளவாளி ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் விடயம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், அவர் மன்னர் சார்லஸ் அளித்த விருந்தில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால், இளவரசர் வில்லியம், கேட் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் மன்னர் அளித்த விருந்தில் கலந்துகொள்லாததற்குக் காரணம், அவர்கள் ஏற்கனவே ராஜ குடும்பத்தின் தனிப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக தயார் செய்வதற்காக, இங்கிலாந்தின் Norfolkஇலுள்ள Sandringham எஸ்டேட்டிற்குச் சென்றுவிட்டதுதான் என்கிறது People என்னும் ஊடகம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |