அமெரிக்காவில் பிரபல நடிகையுடன் இளவரசர் வில்லியம்: ஒரு சுவாரஸ்ய தகவல்
முதன்முறையாக மனைவி இல்லாமல் தனியாக அமெரிக்கா சென்றுள்ள இளவரசர் வில்லியம், பிரபல ஹாலிவுட் நடிகையுடன் தோன்ற இருப்பதாக ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பிரபல நடிகையுடன் தோன்றும் இளவரசர் வில்லியம்
அமெரிக்காவில் பிரபல நடிகையுடன் இளவரசர் வில்லியம் என ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது என்னடா வம்பாகப் போச்சு, ஏற்கனவே மனைவியை விட்டு விட்டு தனியாக அமெரிக்கா சென்றிருக்கிறார் வில்லியம் என ஒரு பக்கம் பேச்சு அடிபட, இப்போது, அமெரிக்காவில் பிரபல நடிகையுடன் இளவரசர் வில்லியம் என ஒரு செய்தி வந்திருக்கிறதே என்று பார்த்தால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
இளவரசர் வில்லியம் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். Earthshot Prize என்னும் சுற்றுச்சூழலுக்கான விருதை உருவாக்கியவர் இளவரசர் வில்லியம். பின்னர், அது ஒரு தொண்டு நிறுவனமாக மாற்றப்பட்டது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போருக்கு இந்த விருது வழங்கப்படும்.
Source: The US Sun
தற்போது, இந்த ஆண்டின் விருதுக்கான இறுதிப் போட்டியில் இருக்கும் 15 பேர் பெயர்களை அறிவிக்க இருக்கிறார் வில்லியம். அதற்காகத்தான் அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.
யார் அந்த நடிகை
அந்த நிகழ்ச்சியில், பிரபல ஹாலிவுட் நடிகையான கேட் பிலான்ச்செட் (Cate Blanchett)ம் பங்கேற்கிறார். இளவரசர் வில்லியமுடைய மனைவியான கேட்டைப் போலவே, இந்த நடிகை கேட்டும் வில்லியமுடைய Earthshot Prize அமைப்பின் ஆதரவாளர் ஆவார்.
ஆக, இளவரசர் வில்லியமுடைய விருது வழங்கும் விழாவில் நடிகை கேட்டும் இளவரசர் வில்லியமுடன் இணைந்து பங்கேற்கிறார் என்பதுதான் உண்மையான செய்தி.
Source: The US Sun
நடிகை கேட், எலிசபெத், தோர், லார்ட் ஆஃப் ரிங்க்ஸ், சிண்ட்ரெல்லா, இண்டியானா ஜோன்ஸ், ராபின் ஹூட் முதலான பல வெற்றிப் படங்களில் நடித்து பல்வேறு விருதுகள் வென்றவர் ஆவார்.
நடிகை கேட்டின் பெயரும், இளவரசி கேட்டைப் போலவே, Catherineதான் (Catherine Elise Blanchett) என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |