சகோதரர்களின் பிரிவு... இளவரசர் வில்லியம் ஆதரவு ஊழியர்களால் வந்த வினை: அம்பலமான அரண்மனை ரகசியம்
பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம்- ஹரி பிரிவு என்பது, வில்லியம் ஆதரவு அரண்மனை ஊழியர்களால் பின்னப்பட்ட சதி வலை என்ற பகீர் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறிப்பாக இளவரசர் ஹரி உளவியல் பாதிப்புக்கு இரையாகியுள்ளார் எனவும், அதனாலையே, அரண்மனைக்கு எதிராக பேசுகிறார் எனவும் வில்லியம் ஆதரவு ஊழியர்கள் நம்ப வைத்துள்ளனர்.
இனி எங்கள் இருவரின் பாதைகளும் வேறு வேறாக மாற வாய்ப்பு இருக்கிறது என 2019ல் இளவரசர் ஹரி ஒரு பேட்டியில் குறிப்பிட்ட பின்னரே, இளவரசர் ஹரிக்கு எதிரான சதி வலை பின்னப்பட்டதாக, அரண்மனை ஊழியர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
இளவரசர் ஹரிக்கு எதிரான அனைத்து கருத்துகளும் உருவாக்கப்பட்டு, ஊடகங்களுக்கு கசிய விடுவது கென்சிங்டன் அரண்மனை ஊழியர்கள் மட்டுமே எனவும் தெரிய வந்துள்ளது.
தென்னாபிரிக்காவில் வைத்து அளிக்கப்பட்ட அந்த பேட்டியில், மேகன் மெர்க்கல் கூட தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். அரச குடும்பத்து உறுப்பினரல்லாத தமக்கு போதிய ஆதரவு கிட்டவில்லை எனவும், யாரும் உதவ முன்வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உலக அளவில் கவனிக்கப்பட்ட அந்த நேர்காணலுக்கு பிறகு, இளவரசர் வில்லியம் ஆதரவு ஊழியர்கள் ஹரிக்கு எதிரான பரப்புரையை தொடங்கியதாக தெரிய வந்துள்ளது.
முக்கியமாக இளவரசர் ஹரி உளவியல் பாதிப்பை எதிர்கொள்கிறார் என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டுள்ளனர். மட்டுமின்றி, குறித்த நேர்காணல் வெளியான அடுத்த நாள், இளவரசர் வில்லியம் அதையே குறிப்பிட்டார்.
ஹரியின் உளவியல் ஆரோக்கியம் தொடர்பில் தாம் கவலைப்படுவதாக முதன்முறையாக தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரிக்கு எதிரான இந்த இழிவான பரப்புரைக்கு வில்லியம் துணை போகிறாரா அல்லது, அவருக்கு தெரியாமல் முன்னெடுக்கப்படுகிறதா என்பதில் உறுதியான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால், இளவரசர் வில்லியம் மொத்த முடிவுகளுக்கும் பொறுப்பேற்கும் கென்சிங்டன் அரண்மனையில் இருந்தே ஹரிக்கு எதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது என்பது மட்டும் உறுதி என அந்த அரண்மனை ஊழியர் தெரிவித்துள்ளார்.