இளவரசரின் மருமகன் மர்ம மரணம்: வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல்
இளவரசர் மைக்கேலின் மருமகன் திடீர் மரணம் தொடர்பில், அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ராஜ குடும்பம் தொடர்பில் முரணான செய்திகள்
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் உயிருடன் இருக்கும் வரையில், அல்லது, இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறும் வரையில், இளவரசர் சார்லஸ் டயானா பிரிவுச் செய்திக்குப் பின், ராஜ குடும்பத்துக்குள் நடக்கும் உள்விவகாரங்கள் தொடர்பான செய்திகள் அதிகம் வெளியாவது இல்லை எனலாம்.
ஆனால், மகாராணியாரின் மரணம் மற்றும் ராஜ குடும்ப மரபுகளை மீறிய ஹரியின் மனைவி மேகன் அமெரிக்கா சென்றதற்குப் பின், ராஜ குடும்பம் குறித்த சின்னச் சின்ன தகவல்களும் வெளியாகிவருகின்றன.
ஆனால், அவை முழுமையானவையாக இல்லை, மன்னரது புற்றுநோய் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது, ஆனால், இளவரசி கேட்டின் உடல் நிலை குறித்து முறையான அறிவிப்பு இல்லை.
திடீரென, ராஜ குடும்பத்துக்கு மிகவும் அன்பான ஒருவரின் மரணத்தால் ராஜ குடும்பத்தினர் கவலையடைந்துள்ளார்கள் என்றொரு செய்தி வெளியானது. பலருக்கும் உயிரிழந்த அந்த நபர் யார் என்றே தெரியவில்லை. அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என முதலில் கூறப்பட்டது இப்போதோ, அவரது மரணம் குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆக மொத்தத்தில், ராஜ குடும்பம் முன்போல இல்லை, ராஜ குடும்பம் தொடர்பில் முரணான செய்திகளே வெளியாகி மக்களைக் குழப்புகின்றன எனலாம்.
யார் இந்த இளவரசர் மைக்கேலின் மருமகன்?
இந்நிலையில், திடீரென இளவரசர் மைக்கேலின் மருமகன் மரணம் என ஒரு செய்தி வெளியானது. யார் அந்த நபர் என்று பார்த்தால், அவர் எலிசபெத் மகாராணியாரின் சகோதர உறவுமுறைகொண்ட இளவரசர் மைக்கேலின் (Prince Michael of Kent) மகளான கேப்ரியல்லாவின் (Lady Gabriella Windsor) கணவர் என்றும், அவரது பெயர் தாமஸ் கிங்ஸ்டன் (Thomas Kingston) என்றும் தெரியவருகிறது.
இந்த தாமஸ், முன்பு இளவரசி கேட்டின் சகோதரியான பிப்பா மிடில்டனையும், பிறகு இளவரசர் வில்லியமுடைய முன்னாள் காதலியான Natalie Hicks-Lobbecke என்பவரையும் காதலித்தவர் ஆவார்.
வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல்
முன்னர் தாமஸின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது, அவர் தலையில் காயத்துடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவருக்கு அருகில் துப்பாக்கி ஒன்று கிடந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அவர் தானே தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், அவர் உயிரிழக்கும்போது அவரது வீட்டில் இல்ல, அவர் தன் பெற்றோரின் வீட்டுக்கருகிலுள்ள, உட்புறமாக பூட்டப்பட்ட ஒரு வீட்டுக்குள் உயிரிழந்துகிடந்துள்ளார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |