பிரித்தானிய அரச குடும்பத்தில் இன்னொரு 'எலிசபெத்'.! இளவரசி பீட்ரைஸ் மகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் என்ன தெரியுமா?
ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், பிரித்தானிய இளவரசியுமான பீட்ரைஸின் மகளுக்கு மகாராணியாரின் பெயருடன் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் (Princess Beatrice) மற்றும் அவரது கணவர் எடோர்டோ மாபெல்லி மோஸ்ஸி (Edoardo Mapelli Mozzi) இருவருக்கும் சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
சுமார் 2.7 கிலோ எடையில் ஆரோக்கியமாக ஆரோக்கியமாக பிறந்த இந்த குழந்தை, லண்டனில் உள்ள செல்சியா மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 18 சனிக்கிழமை இரவு 11.42 மணியளவில் பிறந்தது.
இந்நிலையில், இந்த குழந்தைக்கு "சியன்னா எலிசபெத் மாபெல்லி மோஸ்ஸி" (Sienna Elizabeth Mapelli Mozzi) என்று பெயரிட்டுள்ளதாக பிரித்தானிய அரச குடும்பத்தினர் அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
? Her Royal Highness Princess Beatrice and Mr Edoardo Mapelli Mozzi have named their daughter Sienna Elizabeth Mapelli Mozzi.
— The Royal Family (@RoyalFamily) October 1, 2021
? The couple have said, “We are all doing well and Wolfie is the best big brother to Sienna.” pic.twitter.com/J7PNxn2EjI
மேலும், ட்விட்டரில், குழந்தை சியன்னா எலிசபெத்தின் கால் அஸ்ஸுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
பீட்ரைஸின் மகள், மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 12-வது கொள்ளு பேத்தியாவர் மற்றும் அவரது தாயின் பின்னால் சிம்மாசனத்தில் 11-வது இடத்தில் உள்ளார்.