பிரித்தானிய இளவரசி கேட் மலைப்பயணம்: சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு
புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரித்தானிய இளவரசி கேட் சவாலான மலை பயணம் மேற்கொண்டு அதை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
சவாலை நிறைவு செய்த இளவரசி கேட்
புற்றுநோய் பாதிப்புக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்களின் வாழ்க்கையை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், பிரித்தானிய இளவரசி கேத்தரின் கடந்த வாரம் நேஷனல் த்ரீ பீக்ஸ் சேலஞ்ச்(National Three Peaks Challenge) என்ற கடினமான மலையேற்ற சவாலை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
இளவரசி கேத்தரின் கடந்த 2025ம் ஆண்டே புற்றுநோயில் இருந்து மீண்டு விட்டதாக அறிவித்து இருந்த நிலையில், இந்த மலையேற்றம் அவரின் உடல்நல மீட்சியின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
Every year, hundreds of thousands of people in this country hear the words no one wants to hear. What follows is a path that tests every part of who we are: physically, emotionally, psychologically and spiritually. The challenges ripple outwards, touching families, friendships,… pic.twitter.com/aCkGZBbmWy
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) June 28, 2026
இந்த மலையேற்றம் குறித்து இளவரசி கேட் தன்னுடைய சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேட்டின் சமூக ஊடக பதிவு
அதில், தற்போது இந்த மலைகளில் நடக்கும் அளவுக்கு மிகுந்த ஆரோக்கியத்துடன் நான் இருப்பதற்கு மிகுந்த நன்றியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டிற்காக சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், சமூகத்திற்கு ஏதாவது திரும்ப செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சவாலை மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சையின் தாக்கம் எவ்வளவு முக்கியம் என்பதையும், உடலநல பராமரிப்பின் அவசியம் என என்பதையும் உலக மக்களுக்கு உணர்த்துவதே தன்னுடைய நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
இளவரசி கேத்தரின் சனிக்கிழமை மாலை தன்னுடைய மலை பயணத்தை தொடங்கிய நிலையில், 23 மைல்கள் தூரத்தை, 10,000 அடி உயரத்தை 24 மணி நேரத்தில் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |