குட்டி இளவரசி சார்லோட் குறித்து பெற்றோர் கேட் மற்றும் வில்லியத்தின் திட்டம்: பலிக்கும் ஹரியின் வாக்கு?
இளவரசர் வில்லியம் - கேட் தம்பதி தங்களது மகள் குட்டி இளவரசி சார்லோட்டை பொதுமக்கள் போன்று வேலைக்கு செல்லும் ஒருவராக தயார் படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசி சார்லோட்
பிரித்தானிய ராஜகுடும்பத்தில், பணியாற்றும் ஒருவராக அல்லாமல், நிறுவனம் ஒன்றில், தமது கல்விக்கு தகுந்த வேலையை தேடிக்கொள்ளும் ஒருவராக இளவரசி சார்லோட் தம்மை தயார் படுத்திக்கொள்வார் என கேட் - வில்லியம் தம்பதி கூறியுள்ளது.
@getty
ஏற்கனவே, மன்னராக முடிசூட்டும் முன்னரே, ராஜ குடும்பத்தின் முக்கிய பொறுப்புகளில் இனி குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள் என சார்லஸ் திட்டமிட்டு வருகிறார்.
அதாவது, மன்னர் சார்லஸ் சார்பில் தினசரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும். மட்டுமின்றி, தற்போதைய ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் வரிசையில் இருக்கும் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்க்கல் ஆகியோர் 2020ல் இருந்தே, தங்கள் பொறுப்புகளை துறந்துள்ளதுடன், தங்களுக்கான வாழ்வாதாரத்தை அரண்மனைக்கு வெளியே தேடிக்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
வேலை ஒன்றை தேடிக்கொள்வார்
இதே பாதையை பின்பற்றி, தற்போது கேட் மற்றும் வில்லியம் தம்பதி தங்களது மகள் குட்டி இளவரசி சார்லோட்டை தனித்துவமாக வளர்க்க முடிவு செய்துள்ளனர். தற்போது 7 வயதாகும் சார்லோட் எதிர்காலத்தில் தமது கல்விக்கு தகுந்த வேலை ஒன்றை தேடிக்கொள்வார் என்றே தகவல் கசிந்துள்ளது.
@getty
குட்டி இளவரசி சார்லோட் முழுநேர ராஜகுடும்பத்து உறுப்பினராக அல்லாமல், வேலைக்கு செல்லும் நபராக மாறுவார் என்றால், அவர் கண்டிப்பாக ராஜ குடும்பத்து தனிப்பட்ட விதிகளை மீற தயாராக வேண்டும்.
இதுவே, இளவரசர் ஹரி ஒருமுறை வெளிப்படையாக தெரிவித்திருந்தார், மட்டுமின்றி வில்லியம் அதற்கு கடுமையாக விமர்சனமும் முன்வைத்திருந்தார். வில்லியம் குடும்பத்தில் இளவரசர் ஜோர்ஜ் மட்டுமே முக்கியத்துவம் பெறுவார், எஞ்சியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது வெளியேற வேண்டும்,
அப்படியான ஒரு நெருக்கடி எதிர்காலத்தில் உருவாகும் என ஹரி குறிப்பிட்டிருந்தார்.
தாம் எதிர்கொண்ட அதே நிலை, ராஜ குடும்பத்தில் கால காலமாக தொடர்வாதாகவும் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.