சாதித்த இங்கிலாந்து மகளிர் அணி... கவனம் ஈர்க்கும் குட்டி இளவரசி சார்லோட் கடிதம்
ஸ்பெயினுக்கு எதிரான யூரோ கிண்ணம் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்ற நிலையில் குட்டி இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் வில்லியம் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
வில்லியம் மற்றும் சார்லோட்
லியா வில்லியம்சன் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி தொடர்ச்சியாக ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வெற்றிகளைப் பெற்று வரலாறு படைத்துள்ளனர்.
நடந்து முடிந்த ஸ்பெயினுக்கு எதிரான யூரோ கிண்ணம் இறுதிப் போட்டியைக் காண இளவரசர் வில்லியம் மற்றும் சார்லோட் ஆகியோர் மைதானத்திற்கு சென்றிருந்தனர். இந்த நிலையில், இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நீங்களே ஐரோப்பாவின் சாம்பியன்கள், இங்கிலாந்தே இந்த தருணத்தைக் கொண்டாடுங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
சார்லஸ் மன்னரும் இங்கிலாந்து அணி வீரர்களை மிகவும் பாராட்டியுள்ளார். யூரோ 2025 வென்றதற்கு, உங்களுக்கும், உங்கள் மேலாளருக்கும், உங்கள் அனைத்து ஆதரவு குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சார்லஸ் மன்னர் குறிப்பிட்டுள்ளார்.
கெல்லிக்கு குட்டி இளவரசி நன்றி
மரியோனா கால்டென்டேயின் உதவியுடன் ஸ்பெயின் மகளிர் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றதை அடுத்து, ஆர்சனல் ஸ்ட்ரைக்கர் அலெசியா ருஸ்ஸோ இங்கிலாந்துக்காக ஒரு கோல் அடித்தார்.
இக்கட்டான நேரத்தில், கோல் காப்பாளர் கேட்டா கோலைத் தாண்டி தீர்க்கமான பெனால்டியை அடித்த கெல்லிக்கு குட்டி இளவரசி நன்றி தெரிவித்துள்ளார். கால்பந்து சங்கத்தின் (FA) புரவலரான வேல்ஸ் இளவரசர், மைதானத்தில் சார்லோட்டுடன் ஆட்டத்தை கண்டு களித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |