இளவரசி டயானா கடும் கோபம்... ஹரி மேகன் நெட்ப்ளிக்ஸ் தொடர் குறித்து ஆவிகளுடன் பேசும் பெண் பரபரப்பு தகவல்
இளவரசர் ஹரியும் மேகனும் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர், ராஜ குடும்பத்தில் மட்டுமல்ல, ஆவிகள் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுபோல் தெரிகிறது.
இளவரசி டயானாவின் கோபம்
தற்போது வெளியாகியுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடரில், ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்பட்ட விதம் குறித்த விடயம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது இளவரசி டயானாவை கடும் கோபம் அடையச் செய்துள்ளதாக, ஆவிகளுடன் பேசுபவராகிய Jasmine Anderson என்பவர் தெரிவித்துள்ளார்.
Image: Getty Images
தன் சொந்த வீட்டிலேயே தான் ஒரு சிறைக்கைதிபோல நடத்தப்பட்டதாக உணர்ந்ததாக மேகன் கூறியுள்ள விடயம் டயானாவை கோபமடையச் செய்துள்ளதாகவும், அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பது தனக்குத் தெரியும் என்றும், யாருக்கும் அந்த நிலை ஏற்படக்கூடாது என்றும் டயானா தெரிவித்துள்ளதாகவும் Jasmine தெரிவித்துள்ளார்.
அந்த உணர்வு, ஒருவரது மன நலனையும் சுயகௌரவத்தையும் பாதிக்கக்கூடியது என்றும், ஒருமுறை அந்த பாதிப்புக்குள்ளானால், அதிலிருந்து மீளவே முடியாது என்றும் டயானா தெரிவித்ததாக Jasmine கூறுகிறார்.
Image: netflix
டயானாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள விடயம்
அதே நேரத்தில், தன் மகன் ஹரி குறித்து தான் பெருமையடைவதாக தெரிவித்துள்ள டயானா, ஹரி தன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிப்பதால், அவர் ஒரு அருமையான தந்தை என்று டயானா ஹரியைப் பாராட்டியதாகவும் தெரிவிக்கிறார் Jasmine.
Image: netflix