கேட் மிடில்டனின் துணிச்சல்... மனம் திறந்து பாராட்டிய இளவரசி டயானாவின் சகோதரர்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிவித்துள்ள நிலையில், அவரது நம்பமுடியாத துணிச்சலை இளவரசி டயானாவின் சகோதரர் பாராட்டியுள்ளார்.
பலருக்கும் அதிர்ச்சி
வேல்ஸ் இளவரசி 42 வயதான கேட் மிடில்டன் வெள்ளிக்கிழமை காணொளி ஒன்றை வெளியிட்டு, தாம் புற்றுநோய்க்கான சிகிச்சையை முன்னெடுப்பதாக அறிவித்தார். குறித்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வயிற்றுக்கான அறுவை சிகிச்சையின் போது புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இளவரசி டயானாவின் சகோதரர் ஏர்ல் சார்லஸ் ஸ்பென்சர் தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் நம்பமுடியாத துணிச்சல் மற்றும் எதிர்கொள்ளும் மனநிலை என்றும் குறுப்பிட்டுள்ளார். ஜனவரி மாதம் வயிற்றுக்கான அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட பின்னர், கேட் மிடில்டன் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.
ஓய்வெடுக்க இருக்கிறார்
மட்டுமின்றி, ஈஸ்டர் பண்டிகை முடியும் மட்டும் அவர் ஓய்வெடுக்க இருக்கிறார் என்றே அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சார்லஸ் மன்னரும் தற்போது புற்றுநோய் சிகிச்சையில் உள்ளார்.
நோய் பாதிப்பு தொடர்பில் கேட் மிடில்டன் வெளிப்படையாக அறிவித்துள்ளதை வெகுவாக பாராட்டியுள்ள சார்லஸ் மன்னர், தாம் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |