தன் வயது குறித்து பொய்யான தகவலைக் கொடுத்த இளவரசி டயானா: வெளியாகியுள்ள ஆவண ஆதாரம்
உலகின் பிரபலமான நபர்களில் ஒருவர் என கருதப்படுபவர் பிரித்தானிய இளவரசி டயானா. இன்னமும் உலகில் அவருக்கு ஏராளம் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், டயானா தனது வயதை வேண்டுமென்றே மறைத்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பணி ஒப்பந்தம்
1979ஆம் ஆண்டு, தனது முதல் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார் டயானா. குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் அந்தப் பணிக்கான ஒப்பந்தம் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
BBC
வயது குறித்து பொய்யான தகவலைக் கொடுத்த டயானா
அந்த ஒப்பந்தத்தில், டயானா தனது வயதை வேண்டுமென்றே மாற்றி குறிப்பிட்டுள்ளார். அவரது பிறந்த தினம் 1961, ஜூலை 1. ஆனால், அந்த ஆவணத்தில் டயானா தனது பிறந்த திகதியை 1960, ஜூலை 1 என்று குறிப்பிட்டுள்ளார்.
Auctioneum Ltd
அதாவது, அந்த வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக, தன்னை அதிக வயதுள்ளவர் என காண்பிப்பதற்காக டயானா தனது பிறந்த திகதியை மாற்றி குறிப்பிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
Auctioneum Ltd
Auctioneum Ltd/PA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |