இளவரசி டயானாவின் உயிர் பிரியும் முன் அவர் கடைசியாக பேசிய வார்த்தைகள்
பாரீஸில் கார் விபத்தில் பலியாகும் முன் கடைசியாக இளவரசி டயானா பேசிய வார்த்தைகள் குறித்து அவரை சந்தித்த பிரெஞ்சு நாட்டவர் ஒருவர் கூறியுள்ள தகவல் இது.
பிரான்சில் கார் விபத்தில் பலியான டயானா
1997ஆம் ஆண்டு, பாரீஸில் கார் விபத்தின்றில் பலியானார் பிரித்தானிய இளவரசி டயானா. அந்த நேரத்தில், அவரது சாரதியான Henri Paul மது அருந்தியிருந்ததாகவும், அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட இரண்டு மடங்கு அதிக வேகத்தில் காரை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது.
Credit: News Group Newspapers Ltd
டயானா உயிரிழக்கும் முன் அவரை சந்தித்த பிரான்ஸ் நாட்டு தீயணைப்பு வீரர்
கார் ஒன்று விபத்தில் சிக்கியதை அறிந்த பிரெஞ்சு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
அப்போது, டயானாவை காரிலிருந்து வெளியே எடுத்த Xavier Gourmelon என்னும் தீயணைப்பு வீரர், அவருக்கு உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
தான் டயானாவை மீட்கும்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும், தான் அவரது கையைப் பற்றி அவருக்கு ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்துள்ளார் Xavier.
அப்போது, ’கடவுளே, என்ன நடந்தது?’ என்று Xavierஇடம் கேட்டாராம் டயானா. அதுதான் அவர் கடைசியாக பேசிய வார்த்தைகள்!
நான் அவரை ஆம்புலன்சில் அனுப்பும்போது அவர் பிழைத்துக்கொள்வார் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவர் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக கேள்விப்பட்டபோது அப்செட் ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார் Xavier.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், தான் உதவி செய்தது பிரித்தானிய இளவரசி டயானாவுக்கு என்பது Xavierக்குத் தெரியாதாம். மற்றவர்கள், அது டயானா என்று சொன்னபிறகுதான், திரும்பவும் ஆம்புலன்சுக்குள் பார்த்த Xavierக்கு உண்மை தெரியவந்ததாம்!