இளவரசி டயானாவும் இளவரசர்கள் வில்லியம் ஹரியும் கையெழுத்திட்ட அபூர்வ கடிதம்: யாருக்கு எழுதியது தெரியுமா?
இளவரசி டயானா கைப்பட எழுதி, அவரும் அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரியும் கையெழுத்திட்ட அபூர்வ கடிதம் ஒன்று 18,000 பவுண்டுகளுக்கு ஏலம் விடப்பட உள்ளது.
இளவரசர் வில்லியமுடைய ஏழாவது பிறந்தநாளில் நிகழ்ந்த சம்பவம்
இளவரசர் வில்லியமுடைய ஏழாவது பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது, Sgt George Plumb என்னும் இராணுவ வீரர் தலைமையிலான குழுவினர் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்கள்.
அவர்கள் ஏற்கனவே பல்வேறு நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த நிலையிலும், இளவரசர்களுக்காக அந்த சாகஸ நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்கள்.
டயானா எழுதிய நன்றிக் கடிதம்
Sgt George Plumb தலைமையிலான குழுவிலுள்ள வீரர்கள் பிஸியாக இருந்த நிலைமையிலும், இளவரசர்களுக்காக அந்த சாகச நிகழ்ச்சியை நடத்தியதற்கு நன்றி கூறுவதற்காகத்தான் இளவரசி டயானா அந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில் இளவரசி டயானா மட்டுமின்றி, இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் கூட கையெழுத்திட்டுள்ளதாலும், அந்தக் கடிதம் கென்சிங்டன் மாளிகையின் அதிகாரப்பூர்வ கடிதம் எழுதும் காகிதத்தில் எழுதப்பட்டுள்ளதாலும் அது அரிய கடிதமாக கருதப்படுகிறது.
அந்தக் கடிதம் 18,000 பவுண்டுகளுக்கு ஏலம் விடப்பட உள்ளது.