இளவரசி டயானாவின் அதீத அறியாமை... தலையில் அடித்துக்கொண்ட அயர்லாந்து தூதர்
இளவரசி டயானா உலக நாடுகள் பலவற்றில் பிரபலமானவர். ஆனால், அவர் தனது நாடு சார்ந்த முக்கிய அல்லது அடிப்படை விடயம் ஒன்றைக் குறித்து சரியாக தெரிந்துவைத்துக்கொள்ளாமல் இருந்ததாக அயர்லாந்து தூதராக இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
வட அயர்லாந்துக்கு சென்றிருந்த டயானா
இளவரசர் சார்லசும் இளவரசி டயானாவும் அடிக்கடி வட அயர்லாந்துக்குச் செல்வதுண்டாம். 1993ஆம் ஆண்டு, மே மாதம் இளவரசி டயானா பிரித்தானியாவுக்கான அயர்லாந்துக் குடியரசின் தூதரான Joseph Small என்பவரை சந்தித்துள்ளார்.
அப்போது டயானா, நான் நேற்று உங்கள் நாட்டுக்கு வந்திருந்தேன் என்று கூறினாராம். அதாவது, அவர் சென்றிருந்தது பிரித்தானியாவின் ஒரு பாகமான வட அயர்லாந்துக்கு. ஆனால், அதைக் கூட சரியாக தெரிந்துகொள்ளாமல், அயர்லாந்துக் குடியரசின் தூதரிடம் நான் உங்கள் நாட்டுக்கு வந்திருந்தேன் என்று கூறினாராம் டயானா.
வருங்கால ராணியின் அதீத அறியாமை
அதாவது, வருங்கால மன்னரின் மனைவி, ராணி என்ற நிலையிலிருந்த டயானாவுக்கு, தன் நாடான வட அயர்லாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான, தனி நாடான, அயர்லாந்துக் குடியரசுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.
இது எவ்வளவு பெரிய அறியாமை என்று தனது குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளார் அயர்லாந்துக் குடியரசின் தூதரான Joseph Small.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |