ஹாலிவுட்டில் தடம் பதிக்க விரும்பிய இளவரசி டயானா... நினைவுநாளில் வெளியான சுவாரஸ்ய தகவல்
ஹாலிவுட்டில் தடம் பதிக்க விரும்பியது இளவரசர் ஹரியின் மனைவி மேகன் தான் என்று எண்ணியிருந்தோம், ஆனால், அவரது தாய்க்கும் எந்த விருப்பம் இருந்தது என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது!
ஆம், நேற்று, மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் 24ஆவது நினைவுநாள். 1997ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 31ஆம் திகதிதான் அவர் பாரீஸில் கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.
ஆனால், அவர் உயிரிழப்பதற்கு முன், ஹாலிவுட்டில் தடம் பதிக்க விருப்பம் கொண்டிருந்தார் என்னும் சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இளவரசி டயானாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், அவரது தனிப்பட்ட குரல் பயிற்சியாளருமான Stewart Pearce (68) என்பவர், டயானாவின் 24ஆவது நினைவுநாளில் இந்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.
நடிகரும் திரைப்பட தயாரிப்பளருமான Kevin Costner, பாடிகார்ட் என்ற பிரபல திரைப்படத்தில் எப்படியாவது டயானாவை கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சி செய்தாராம். ஆனால், படத்தில் முத்தக்காட்சிகள் எல்லாம் இருக்குமே என்றாராம் டயானா.
ஆம், அவர் ஹாலிவுட்டுக்குச் செல்ல விரும்பியது சினிமா தயாரிப்பதற்காகத்தானாம், நடிப்பதற்காக இல்லையாம்.
அது மட்டுமின்றி மற்றொரு முக்கிய தகவலையும் தெரிவித்துள்ளார் Stewart Pearce. அதாவது, அந்த காலகட்டத்தில் டயானாவும் அவரது காதலர் டோடி ஃபயத்தும் ஆழமாக காதலித்து வந்ததாகவும், டயானா தனது மகன்கள் வில்லியம் மற்றும் ஹரியையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு சென்று விடும் திட்டத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கிறார் Stewart Pearce. ஆனால், அவரது கனவுகள் அனைத்தையும் அந்த பாழாய்ப்போன ‘விபத்து’ நிறைவேற விடாமல் செய்துவிட்டது.
டயானா இறக்கும்போது கர்ப்பமாக இருந்தது உண்மையா என்ற கேள்வியும் Stewart Pearce முன்வைக்கப்பட்டது. இல்லை, அது உண்மையில்லை என்கிறார் அவர்!