ராணி கமீலாவைக் குறித்து 30 ஆண்டுகளுக்கு முன் மிகச்சரியாக கணித்த இளவரசி டயானா
மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு பொறுப்புகளை தன் தோளில் ஏற்றுகொண்டு பரபரப்பாக இயங்கிவருகிறார் ராணி கமீலா.
மிகச்சரியாக கணித்த இளவரசி டயானா
கமீலாவுக்கு விரைவில் 77 வயது ஆகவிருக்கிறது. என்றாலும், தன் காதல் கணவருடைய இடத்தில் நின்று அவருக்காக பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு பரபரப்பாக இயங்கிவருகிறார் கமீலா.
பிபிசி தொலைக்காட்சியின் ராஜ குடும்ப செய்தியாளரான ஜென்னி பாண்ட் என்பவர் கூறும்போது, இளவரசி டயானா உயிருடன் இருக்கும்போது, தன்னிடம், கமீலா சார்லசுக்கு உண்மையுள்ளவர் என்றும், கமீலா மீதான சார்லசின் காதல், மிகவும் வலிமையானது என்றும், அவர் வேறு யாரை திருமணம் செய்திருந்தாலும், அது, இந்த காதல் போல இருந்திருக்கவே முடியாது என்றும் கூறியதாக தெரிவிக்கிறார்.
இப்போது தன் கணவர் மீது கமீலா காட்டும் அன்பையும் அக்கறையையும், அவருக்காக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அயராமல் கடமையாற்றிவருவதையும் பார்க்கும்போது, டயானா, 30 ஆண்டுகளுக்கு முன்பே, கமீலாவைக் குறித்து மிகச்சரியாகவே கணித்திருக்கிறார் என்கிறார் ஜென்னி பாண்ட்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |