சார்லஸுடன் வாழும் போதே வேறு ஒருவருடன் காதலில் விழுந்த டயானா! பலருக்கும் தெரியாத தகவல்
ஜேம்ஸ் ஹிவிட் என்பவருடன் பழகியதாக நேர்காணலில் கூறியிருந்த டயானா.
பலருக்கும் தெரியாத தகவல்கள்.
பிரித்தானிய இளவரசி டயானாவின் காதலர் என கிசுகிசுக்கப்பட்ட ஜேம்ஸ் ஹிவிட் தொடர்பான பலரும் அறியா தகவல்கள் வெளியாகியுள்ளது.
சார்லஸுக்கும், டயானாவுக்கும் கடந்த 1981ல் திருமணம் நடைபெற்ற நிலையில் 1996ல் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இதனிடையில் ராணுவத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஹெவிட் என்பவருடன் டயானாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. சார்லஸுடன் வாழும் போதே இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.
ஜேம்ஸுடன் பழக்கம் இருந்ததை டயானாவே கடந்த 1995ல் பனோரமா நேர்காணலில் உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும் இளவரசி ஹரி, டயானா - ஜேம்ஸ்க்கு பிறந்த மகன் தான் என ஒரு வதந்தி வெகுகாலமாக பரவியது.
ZUMA Press / Getty Images / REX/Shutterstock
ஏனெனில் ஜேம்ஸ் - ஹரி ஆகிய இருவர் உருவத்திலும் ஒத்து போகும் அம்சங்கள் நிறைய இருப்பதாக கூறப்பட்டது. அதே நேரம் ஜேம்ஸ் - டயானா இருவரும் 1986ல் இருந்து 1991 வரை தொடர்பில் இருந்தனர்.
இது குறித்து ஜேம்ஸ் 2002ல் அளித்த பேட்டியில், டயானாவுடனான தனது உறவு தொடங்கிய போது இளவரசர் ஹரி ஏற்கனவே நடக்க தொடங்கிவிட்டார் என கூறி வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார். அதாவது ஹரி 1984லேயே பிறந்துவிட்டார், 1986ல் தான் டயானாவுடன் தனக்கு தொடர்பு ஏற்பட்டதாக ஜேம்ஸ் கூறினார்.
ஜேம்ஸுக்கு தற்போது 64 வயதாகிறது. கடந்த 2017ல் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் அவர் பாதிக்கப்பட்டார். பின்னர் நோயில் இருந்து மீண்ட அவர் கடந்தாண்டு வெளியான தகவலின்படி தோட்டக்காரராக பணிபுரிவதாக தெரியவந்துள்ளது.
oprahdaily